டாஸ்மாக் கடை திறக்கும் நேரம் மாற்றம். தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்கள் வாரியாக தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனை கருத்தில் கொண்டு டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை குறைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
டாஸ்மாக் கடை திறக்கும் நேரம் மாற்றம் :
மக்களவை தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் பொதுமக்களுக்கு 500 முதல் 1000 ரூபாய் வரை பணம் கொடுப்பதாகவும். அதுமட்டுமின்றி இரவு நேரங்களில் டாஸ்மாக்கிற்கு அழைத்து சென்று மதுபானங்களை வாங்கித்தருவதாகவும் புகார் எழுந்த நிலையில்
பாஜகவால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை ! நாங்கள் தான் பாதுகாப்பு – பிரச்சாரத்தில் கனிமொழி கருத்து !
இதனால் இரவு நேரங்களில் 10 மணி வரை செயல்படும் டாஸ்மாக் கடைகளை இரவு 8 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தமிழக அரசிற்கு கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.