
டி20 உலகக்கோப்பை தொடரை கைப்பற்றியதை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜுக்கு அடித்த ஜாக்பாட் தெலுங்கானா அரசு சார்பில் அரசுப்பணி மற்றும் வீடு வழங்கப்படும் என முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜுக்கு அடித்த ஜாக்பாட்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
டி20 உலகக்கோப்பை தொடர் :
கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து இந்தியா மட்டும்மல்லாமல் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரின் பாராட்டையும் இந்திய கிரிக்கெட் அணி பெற்றது.
மேலும் 17 வருடங்களுக்கு பிறகு இந்த டி20 உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து தங்களின் ஓய்வை அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முகமது சிராஜுக்கு அரசுப்பணி, வீடு தெலுங்கானா முதல்வர் :
அந்த வகையில் டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ சார்பில் 120 கோடி பரிசுத்தொகை அறிவித்திருந்தது குறிப்படத்தக்கது.
இதனை தொடர்ந்து மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, சூர்யா குமார் யாதவ், ஜெய்ஸ்வால் போன்ற வீரர்களை அழைத்து பாராட்டி ஆளுக்கு தலா 15 கோடி ரூபாய் பரிசுத்தொகையை அறிவித்தார்.
KKR அணியின் புதிய ஆலோசகர் யார் தெரியுமா? – அப்ப கவுதம் கம்பீர் நிலைமை என்ன?
அந்த வகையில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி டி20 உலகக்கோப்பை தொடரில் இடம்பெற்ற முகமது சிராஜை நேரில் அழைத்து அவரை பாராட்டியதுடன் மட்டுமல்லாமல் அவருக்கு தெலுங்கானா அரசு சார்பில் ஹைதராபாத்தில் ஒரு வீடும், அத்துடன் அரசாங்க பணியும் வழங்கப்படும் என உறுதியளித்தார்.
சமீபத்திய செய்திகள் :
சீன மக்கள் சுவைக்கும் வினோத சூப்