Home » செய்திகள் » பேருந்து நடத்துனர் மீது எச்சி துப்பி ரகளை செய்த பெண்.., மது போதையில் கலாட்டா செய்ததால் பரபரப்பு!!

பேருந்து நடத்துனர் மீது எச்சி துப்பி ரகளை செய்த பெண்.., மது போதையில் கலாட்டா செய்ததால் பரபரப்பு!!

பேருந்து நடத்துனர் மீது எச்சி துப்பி ரகளை செய்த பெண்.., மது போதையில் கலாட்டா செய்ததால் பரபரப்பு!!

இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் மதுபானத்திற்கு அடிமையாகி வருகின்றனர். மேலும் குடிபோதையில் சில தவறான செயல்களையும் செய்கின்றனர். அந்த வகையில் குடி போதையில் ஒரு பெண் செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தெலுங்கானா மாநிலத்தில் ஒரு பெண் அரசு பேருந்தில் பயணம் செய்த நிலையில், அந்த பெண் நடத்துனரிடம் இலவச டிக்கெட் கேட்டுள்ளார்.

அதற்கு நடத்துனர் ஆதார் அட்டையை காட்டுங்கள் என்று கூறியுள்ளார். இதற்கு காண்டான அந்த பெண், நடத்துனரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அதுமட்டுமின்றி 15 ரூபாய் டிக்கெட்டுக்கு 500 ரூபாய் கொடுத்துள்ளார். சில்லறை இல்லை என்று நடத்துனர் கூறியதற்கு, அவரை தாக்கி, காலால் மிதித்து, முகத்தில் எச்சில் துப்பி ரகளை செய்துள்ளார்.

அப்போது அந்த பெண் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே இது குறித்து ஹயாத் நகர் டெப்போ மேலாளர் ஜல்காம் விஜய், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தற்போது காவல்துறை தங்களது விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

இந்த போட்டோவில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா? பிக்பாஸ் பிரபலத்தோட முன்னால் காதலியாம் – புகைப்படம் உள்ளே!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top