இனி அரைநாள் தான் ஸ்கூல்
நாட்டின் பல முக்கிய மாநிலங்களில் மழை காலம் முடிந்து தற்போது வெயில் காலம் தொடங்கியது. சில பகுதிகளில் 100 டிகிரி செல்சியஸ்-க்கு மேல் வெயில் வெளுத்து வாங்கி வருவதால் மக்கள் பலரும் வெளியே வர பயப்படுகிறார்கள். அதுமட்டுமின்றி வெயிலால் சில நோய்களும் மக்களை தாக்குவதால் தொடர்ந்து அச்சத்தில் இருக்கிறார்கள். மேலும் இந்த வெயில் காலத்தை சமாளிக்க அரசு பல முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவர்களின் நலனை பேணி காக்க அரசு மும்முரமாக இருந்து வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்காக தெலுங்கானா அரசு ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தற்போது கோடை காலம் ஆரம்பித்த நிலையில் வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருந்து வருவதால் இனிமேல் பள்ளி அரைநாள் மட்டுமே இயங்கும் என்று அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அதன்படி இனிமேல் பள்ளி காலை 8 மணி முதல் மதியம் 12:30 மணி வரையில் மட்டுமே பள்ளி இயங்கும் என அம்மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த வசதி கோடை காலத்திற்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.