பிக்பாஸ் சீசன் 8ல் பிரபல தமிழ் ஹீரோ? அடேங்கப்பா இத யாரும் எதிர்பார்கலையே!பிக்பாஸ் சீசன் 8ல் பிரபல தமிழ் ஹீரோ? அடேங்கப்பா இத யாரும் எதிர்பார்கலையே!

Bigg Boss 8: பிக்பாஸ் சீசன் 8ல் பிரபல தமிழ் ஹீரோ: விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 7 கடந்த ஆண்டு நிறைவு பெற்ற நிலையில் தற்போது சீசன் 8-க்கான பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குக் வித் கோமாளி சீசன் 5 முடிந்தவுடன் பிக்பாஸ் ஷோ குறித்து தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் தெலுங்கிலும் பிக்பாஸ் சீசன் 8 விரைவில் ஆரம்பமாக இருக்கிறது.

இந்த ஷோவை சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் தெலுங்கில் இதற்கு முன்னர் ஜூனியர் என்டிஆர் மற்றும் நானி தொகுத்து வந்த நிலையில் கடந்த 3 சீசன்களாக தான் நாகார்ஜூனா தொகுத்து வழங்கி வருகிறார். இதனை தொடர்ந்து அவருக்கு கடந்த சீனை விட இந்த சீசனில் அதிக சம்பளம் கொடுக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

இப்படி இருக்கையில் ஐந்தே தெலுங்கு பிக்பாஸ் சீசன் 8-ல் ஒரு பிரபல தமிழ் ஹீரோ பங்கேற்க இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 90ஸ் காலகட்டத்தில் பெண்களின் கனவு நாயகனாக இருந்து வந்த சாக்லேட் பாய் அப்பாஸ் தான் போட்டியாளராக கலந்து கொள்ள இருக்கிறாரம்.

Also Read: தனுஷின் ராயன் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடியா?

இது குறித்த வார்த்தை அவரிடம் போய் கொண்டிருக்கிறதாம். இவர் பிக்பாஸ் தமிழ் சீசன் 7ல் கலந்து கொள்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

தற்போது அவர் தெலுங்கில் பங்கேற்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்படி அவர் கலந்து கொண்டால் கண்டிப்பாக அவருக்கு சினிமாவில் செகண்ட் இன்னிங்க்ஸ் ஆரம்பிக்கலாம். மேலும் டிஆர்பியும் பிச்சு உதற போகிறது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *