Home » செய்திகள் » முக்கிய கேபினட் பதவிகளை கேட்கும் கூட்டணி கட்சிகள் – பாஜகவிற்கு நெருக்கடி !

முக்கிய கேபினட் பதவிகளை கேட்கும் கூட்டணி கட்சிகள் – பாஜகவிற்கு நெருக்கடி !

முக்கிய கேபினட் பதவிகளை கேட்கும் கூட்டணி கட்சிகள் - பாஜகவிற்கு நெருக்கடி !

முக்கிய கேபினட் பதவிகளை கேட்கும் கூட்டணி கட்சிகள். தற்போது நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மத்தியில் ஆளும் கட்சியான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 291 இடங்களை கைப்பற்றியுள்ளது. அந்த வகையில் தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் மத்தியில் பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைய உள்ளது.

தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் ஆதரவில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது.

அந்த வகையில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கூட்டணிக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில் சபாநாயகர் மற்றும் 5 கேபினட் அமைச்சர் பதவிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் 12 இடங்களை கொண்ட நிதிஸ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியானது பீகார் மாநிலத்தின் வளர்ச்சிக்காக தங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும், 3 கேபினட் அமைச்சர் மற்றும் 2 இணை அமைச்சர் பதவிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றம் செல்ல உள்ள 73 பெண் எம்.பிக்கள் ! பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு மசோதா குறித்து கேள்வி !

இவ்வாறு கூட்டணி கட்சிகள் நிபந்தனை விதிப்பது பாஜகவிற்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top