தெலுங்கு வருடப்பிறப்பு 2024. உகாதி என்பது பஞ்சங்கா என்றும் அழைக்கப்படும் இந்து சந்திர நாட்காட்டியின்படி புத்தாண்டின் முதல் நாளைக் கொண்டாடும் பண்டிகையாகும். ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கோவா ஆகிய மாநிலங்களில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.
தெலுங்கு வருடப்பிறப்பு 2024
உகாதி:
உகாதி இந்து புத்தாண்டின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது இந்தியாவில் ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா மற்றும் கோவாவில் அனுசரிக்கப்படுகிறது. யுகாதி அல்லது உகாதி என்ற சொற்கள் சமஸ்கிருத வார்த்தைகளான ‘யுகா’ (வயது) மற்றும் ‘ஆதி’ (ஆரம்பம்), ‘புதிய யுகத்தின் ஆரம்பம்’ என்பதைக் குறிக்கிறது. தெலுங்கு பேசும் மக்களால் கொண்டாடப்படுவதால் தெலுங்கு வருடப்பிறப்பு என்றும் குறிப்பிடப்படுகிறது. மகாராஷ்டிராவில் குடி பத்வா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உகாதி, கர்நாடகாவில் யுகாதி என வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுவது காலங்காலமாக இருந்து வரும் பாரம்பரியம் ஆகும்.
வரலாறு:
இந்து புராணங்களின்படி, இந்த நாளில்தான் பிரம்மா பிரபஞ்சத்தைப் படைத்தார். பின்னர் அவர் நாட்கள், வாரங்கள், மாதங்கள் மற்றும் ஆண்டுகளை உருவாக்கினார். எனவே, பிரபஞ்சம் உருவான முதல் நாளாக உகாதி கருதப்படுகிறது. இந்த பண்டிகையை, பிரம்மாவின் பணியை அங்கீகரிப்பதற்காக இந்த திருவிழா அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என மக்கள் கொண்டாடுகிறார்கள். இறைவன் யுகங்களை உருவாக்குபவராக நம்பப்பட்டு, திருவிழா நாளில் போற்றப்படுகிறார்.
தெலுங்கு வருடப்பிறப்பு 2024:
2024 ஆம் ஆண்டில், உகாதி ஏப்ரல் 9 ஆம் தேதி செவ்வாய்கிழமை வருகிறது.
ராம நவமி 2024 ! இந்த ஆண்டு சித்திரை 4 புதன் கிழமை வருகிறது முழு விபரம் உள்ளே !
கொண்டாடும் விதம்:
இந்த நாளில், முகுலு அல்லது ரங்கோலி போன்ற வண்ணமயமான தரை வடிவங்களை உருவாக்குவது, பரிசுகளை மாற்றுதல், தர்மம் செய்தல், எண்ணெய் மற்றும் சடங்கு குளியல் மற்றும் பச்சடி எனப்படும் சிறப்பு உணவை தயாரித்து பகிர்ந்துகொள்வது என பல்வேறு விதமாக கொண்டாடப்படுகிறது.
தெலுங்கு பழக்கவழக்கங்களின்படி, பச்சடி ஆறு சுவைகளின் கலவையுடன், வரவிருக்கும் ஆண்டில் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் தழுவுவதைக் குறிக்கிறது.
கோவில்கள், வீடுகள் மற்றும் கடைகளின் நுழைவாயில்களில் மா இலைகள் வைக்கப்படுது வழக்கம். மேலும், உகாதியானது புதிதாக ஒன்றைத் தொடங்குவதற்கு செழிப்பான நாளாகக் கருதப்படுவதால், இந்த நாளில் புதிய வணிக முயற்சிகலும் இந்நன்நாளில் தொடங்கப்படும். இந்திய மட்டுமின்றி, வெளி நாடுகளில் வாழும் மக்கள் மத்தியிலும் உகாதி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.