ஆம் ஆத்மிக்கு தீவிரவாத அமைப்பு நன்கொடை. தற்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தற்போது ஆட்சியில் உள்ள பாஜக மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும் என்ற நோக்கில் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் முக்கிய எதிர்க்கட்சிகள் தங்கள் தலைமையில் இந்தியா கூட்டணி என்ற மெகா கூட்டணியை அமைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
ஆம் ஆத்மிக்கு தீவிரவாத அமைப்பு நன்கொடை
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ஆம் ஆத்மிக்கு காலிஸ்தான் அமைப்பு நன்கொடை :
ஆம் ஆத்மி கட்சிக்கு காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள் 102 கோடி நன்கொடை அளித்ததாக காலிஸ்தான் தீவிரவாதி குர்பத் சிங் பனுன் தெரிவித்துள்ள கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் 2014 முதல் 2022 ஆண்டுகளில் காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள் ஆம் ஆத்மி கட்சிக்கு 102 கோடி நன்கொடை அளித்ததாகவும் இதற்கு கைமாறாக டெல்லியில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி புல்லரை விடுதலை செய்வதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாக காலிஸ்தான் தீவிரவாதி குர்பத் சிங் பனுன் தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.