இந்த ஆண்டு தை மாதம் 2025 திருமணம் நடத்த சுபமுகூர்த்த நாட்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
பொதுவாக மக்கள் எந்த ஒரு காரியங்களை செய்ய நினைத்தாலும், அதை நல்ல நாள் பார்த்து தான் செய்வார்கள். இன்னும் சொல்ல போனால், ஏதேனும் புதிய விஷயங்களை தொடங்கும் போதும், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தும் பொழுதும் நல்ல நாளான சுப முகூர்த்த நாளில் மட்டுமே நடத்துவார்கள்.
தை மாதம் 2025 சுபமுகூர்த்த நாட்கள் இதோ.., திருமணம் நடத்த இதான் சரியான டைம்!!
அந்த நாட்களில் செய்யும் காரியங்கள் அவர்களுக்கு மகிழ்ச்சியாகவும், வெற்றியாகவும் அமையும் என்று நம்பிக்கை. இதை பெரும்பாலும் இந்து மதத்தினர் தான் நம்பி செய்கின்றனர். அப்படி சுபமுகூர்த்த நாள் என்பது ஒரு மாதத்தில் ஒரு சில நாட்களில் மட்டுமே வரும். தற்போது மார்கழி முடிந்து தை பொறந்தாச்சு.
பொதுவாக தை பிறந்தால் வழி பிறக்கும் என்று மூத்த குடிமக்கள் கூறி வருகின்றனர். மேலும் இந்த மாதத்தில், வீடு கிரகப்பிரவேசம் செய்வது, திருமண நிச்சயதார்த்தம், திருமணம் முகூர்த்தம் போன்றவைகளை செய்ய உகந்த மாதமாக தை மாதம் இருந்து வருகிறது. மேலும், இந்த 2025 ஆம் ஆண்டில் தை மாதம் திருமணங்கள் செய்வதற்கான சுப முகூர்த்த நாட்கள் என்னென்ன என்பதை பற்றி கீழே தெரிந்து கொள்ளலாம்.
எத்தனை முக ருத்ராட்சம் அணிந்தால் நல்லது?.., அதனால் என்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?
தை 2025 சுப முகூர்த்த நாட்கள்:
- 19 ஜனவரி 2025 (தை 06) – ஞாயிற்றுக்கிழமை (தேய்பிறை)
- 20 ஜனவரி 2025 (தை 07) – திங்கள் கிழமை (தேய்பிறை)
- 31 ஜனவரி 2025 (தை 18) – வெள்ளிக்கிழமை (வளர்பிறை)
- 02 பிப்ரவரி 2025 (தை 20) – ஞாயிற்றுக்கிழமை (வளர்பிறை)
- 03 பிப்ரவரி 2025 (தை 21) – திங்கள் கிழமை (வளர்பிறை)
- 10 பிப்ரவரி 2025 (தை 28) – திங்கட்கிழமை (வளர்பிறை)
ஆன்மிக செய்திகள் உடனுக்குடன் இதோ!
தூத்துக்குடி பனிமய மாதா கோவில்: சிறப்புகளும் அன்னையின் வரலாறும்!
கந்த சஷ்டி விரதம் 2024: முருகனுக்கு வீட்டில் இருந்து விரதம் இருப்பது எப்படி?
பழனி கோயிலில் ரோப் கார் சேவை நிறுத்தம்(07.10.2024) – என்ன காரணம் தெரியுமா?