நடிகர் விஜய் கடைசியாக நடிக்கும் தளபதி 69 டைட்டில் குறித்து சமூக வலைத்தளத்தில் முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படம் தான் “தளபதி 69”. இப்படத்தில் அவருடன் சேர்ந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, டிஜே மற்றும் பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். மேலும் அனிருத் இசையமைக்கும் இந்தப் படம் அக்டோபர் மாத வாக்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி இந்த படம் விஜய்யின் கடைசி படம் என்பதால் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அதற்கு முக்கிய காரணம் விஜய் கடந்த வருடம் பிப்ரவரி 2ம் தேதி “தமிழக வெற்றிக் கழகம்” என்ற பெயரில் கட்சி தொடங்கி அரசியல்வாதி அஸ்திவாரத்தை தொடங்கினார். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தளபதி 69 டைட்டில் என்ன தெரியுமா?.., விஜய் பட தலைப்பு தான்? ரசிகர்கள் ஷாக்!!
வாரிசு பட நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு என்ன தான் ஆச்சு?.., நொண்டி நொண்டி விமான நிலையத்திற்கு வந்த வீடியோ வைரல்!!
இந்நிலையில் ஜனவரி 26, குடியரசு தினத்தன்று தளபதி 69 படத்தின் அப்டேட் வெளியாகும் தகவல் தெரிவிக்கின்றன. அதாவது, தளபதி 69 படத்திற்கு ‘நாளைய தீர்ப்பு’ என தலைப்பு வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த டைட்டில் மூலம் தான் விஜய் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்தார். தற்போது அந்த டைட்டிலுடன் சினிமாவை விட்டு வெளியேற போகிறார் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
படப்பிடிப்பில் காயமடைந்த வில்லன் நடிகர் திடீர் மரணம்.., அதிர்ச்சியில் திரையுலகம்!!!
அரைகுறை ஆடையுடன் திட்டிய ஜெயிலர் வில்லன் நடிகர் விநாயகன்.., இணையத்தில் வைரலாகும் வீடியோ!!
தளபதி 70 படத்தில் நடிக்கும் விஜய்?.., GOAT 2 or லியோ 2 .., ரெடியாகும் தரமான ஸ்கிரிப்ட்!!