
“தளபதி 69” படத்தில் இணைந்த பிரபல நடிகை: தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்ற நடிக்கியர்களில் முக்கிய பங்கு தளபதி விஜய்க்கு இருக்கிறது என்றால் அது மிகையாகாது. தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் படத்தின் ஷூட்டிங் இன்னும் சில நாட்களில் முடிவடைய இருக்கிறது. அடுத்த கட்ட பணிகளில் படக்குழு தீவிரமடைந்து வரும் நிலையில் படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி வெளியாக இருக்கிறது.
“தளபதி 69” படத்தில் இணைந்த பிரபல நடிகை

JOIN WHATSAPP TO GET DAILY NEWS
சமீபத்தில் படம் தொடர்பாக போட்டோ, வீடியோ வெளியான நிலையில், ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கின்றனர். மேலும் விஜய்யின் கடைசி படத்தை எந்த இயக்குனர் இயக்க போகிறார் என்று திரையுலகினர் பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில்,இறுதியாக இயக்குனர் எச். வினோத் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் தளபதி 69 படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
Also Read: “விடாமுயற்சி” படத்தின் First லுக் போஸ்டர் வெளியீடு – படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு!
அதாவது நடிகர் விஜய் நடிக்க இருக்கும் தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கேவிஎன் நிறுவனம் தயாரிக்க இருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவை மேற் கொள்கிறார். அதுமட்டுமின்றி இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் வரும் நவம்பர் மாதம் தொடங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதை கேட்ட ரசிகர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.
சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க
அஜித்தின் “Good Bad Ugly” படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
தவெக தலைவர் விஜய் ஊக்கத்தொகை வழங்கும் விழா
ஜூலை 26ல் “ராயன்” வருகிறான்… ரிலீஸ் தேதியை குறித்த நடிகர் தனுஷ்