பிரபல நடிகர் விஜய்யின் கடைசி படமான தளபதி 69 ரிலீஸ் தேதியில் மாற்றம் குறித்து ஷாக்கிங் தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் தி கோட். இதனை தொடர்ந்து ஹெச். வினோத்துடன் கைக்கோர்த்து தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துடன் விஜய் சினிமாவை விட்டு விலக இருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு தளபதி தமிழக வெற்றிக் கழகம் மூலம் அரசியல்வாதியாக ஜொலிக்க இருக்கிறார்.
விஜய்யின் கடைசி படமான தளபதி 69 ரிலீஸ் தேதியில் மாற்றம்?.., வெளியான ஷாக்கிங் தகவல்!!
இதனால் தளபதி 69 படத்திற்கு ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். மேலும் இந்த படத்தில் அவருடன் சேர்ந்து, பூஜா ஹெக்டே, பாபி டியோல், கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. மேலும் இந்த படத்திற்கு நாளைய தீர்ப்பு என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கர்நாடக அரசின் விருதை ஏற்க மறுத்த கிச்சா சுதீப் .. என்ன காரணம் தெரியுமா?
இந்நிலையில் விஜய்யின் கடைசி படம் குறித்து ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 69 படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அடுத்த வருடம் பொங்கலுக்கு தான் படம் வெளியாகும் என சினிமா நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதை கேட்ட விஜய் ரசிகர்கள் சோகத்தில் இருந்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
பிக்பாஸ் முத்துக்குமரனின் வீட்டை பார்த்துள்ளீர்களா?.., அழகிய புகைப்படம் உள்ளே!!
தளபதி 69 டைட்டில் என்ன தெரியுமா?.., விஜய் பட தலைப்பு தான்? ரசிகர்கள் ஷாக்!!
பிக்பாஸிற்கு பிறகு அன்ஷிதாவுக்கு அடித்த ஜாக்பாட்.., விஜய் டிவி கொடுத்த பிரம்மாண்ட வாய்ப்பு!!