Home » சினிமா » நன்றி மறக்காத தளபதி ., அண்ணனை நினைத்து உருகி அழுத விஜய்.., கண்கலங்கிய ரசிகர்கள்!!

நன்றி மறக்காத தளபதி ., அண்ணனை நினைத்து உருகி அழுத விஜய்.., கண்கலங்கிய ரசிகர்கள்!!

நன்றி மறக்காத தளபதி ., அண்ணனை நினைத்து உருகி அழுத விஜய்.., கண்கலங்கிய ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் பெரும் தூணாக இருந்த கேப்டன் விஜயகாந்த் நேற்று உயிரிழந்த சம்பவம் அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. நேற்று அவர் உடலுக்கு திரை பிரபலங்கள் முதல் அரசியல்வாதிகள் வரை நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது பான் இந்திய அளவில் நம்பர் ஒன் நடிகராக இருந்து வரும் நடிகர் விஜய்யின் கெரியரில் தொடக்க புள்ளியாக இருந்தவர் தான் கேப்டன் விஜயகாந்த்.

அவரை நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை என்று பலரும் விமர்சனங்கள் எழுப்பிய நிலையில், நேற்று இரவு ஷூட்டிங்கில் இருந்து நேரடியாக கேப்டனை பார்க்க வந்துள்ளார். கேப்டனை வைத்திருந்த கண்ணாடி பெட்டியின் மீது கண்கலங்கி அழுதார். அதன்பின்னர் அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறிவிட்டு கிளம்பும் போது கேப்டனை 10 நொடிகள் நின்று பார்த்தது அனைவரது கண்ணிலும் நீர் வழிய தொடங்கி விட்டது. இறுதி ஊர்வலத்திற்கு வருவாரா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top