அப்படி போடு.., ஆட்சிக்கு வந்ததும் இந்த கட்சியை எதிர்க்க பிள்ளையார் சுழி போட்ட விஜய்.., ஓஹோ.., இது தான் தளபதியோட சர்காரா?அப்படி போடு.., ஆட்சிக்கு வந்ததும் இந்த கட்சியை எதிர்க்க பிள்ளையார் சுழி போட்ட விஜய்.., ஓஹோ.., இது தான் தளபதியோட சர்காரா?

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், மக்களின் செல்ல பிள்ளையாகவும் இருந்து வருபவர் தான் தளபதி விஜய். தற்போது இவர் நடிப்பில் GOAT திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக இருந்து வரும் செய்தி என்றால் அது நேற்று சென்னையில் நடந்த கலைஞர் 100வது விழாவை பற்றி தான். அதாவது கலைஞரின் 100வது பிறந்த நாளை நேற்று திமுக கட்சி கொண்டாடிய நிலையில், இந்த விழாவில் பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த விழாவில் கலந்து கொள்ள விஜய் மற்றும் அஜித்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், இரண்டு பேருமே வரவில்லை.

தளபதி விஜய்
தளபதி விஜய்

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் விஜய், கலைஞர் ஐயாவின் 100வது பிறந்த நாளை இதை போல் கொண்டாட வேண்டும் என்று அப்போது அந்த மேடையில் நானும் இருக்க ஆசை படுகிறேன் என்று கூற அதற்கு அஜித் பலமாக கை தட்டிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அன்னைக்கு சொன்ன விஜய் ஏன் நேற்று வரவில்லை என்று பலரும் கேள்வி ஏழுப்பி வருகின்றனர்.

தளபதி விஜய்
தளபதி விஜய்

தற்போது தளபதி விஜய் அரசியலுக்கு தன்னை தயார்படுத்தி வருகிறார். எனவே அவர் திமுகவை ஒத்துக்குகிறார் என்று அப்பட்டமாக தெரிகிறது. எனேவ விஜய் ஆட்சிக்கு வந்தால் முதலில் திமுகவை தான் எதிர்ப்பார் என நெட்டிசன்கள் பலரும் கூறி வருகின்றனர். அதற்கான பிள்ளையார் சுழியை தான் நேற்று விஜய் போட்டுள்ளார் என்று பேசி வருகின்றனர்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *