GOAT படத்தை பார்த்து விஜய் சொன்ன அந்த வார்த்தை - படம் எப்படி இருக்கு? முதல் விமர்சனம் இதோ!!GOAT படத்தை பார்த்து விஜய் சொன்ன அந்த வார்த்தை - படம் எப்படி இருக்கு? முதல் விமர்சனம் இதோ!!

GOAT படத்தை பார்த்து விஜய் சொன்ன அந்த வார்த்தை: கோலிவுட் சாம்ராஜ்ஜியத்தின் கிங்காக இருந்து வருபவர் தான் இளைய தளபதி விஜய். தற்போது இவர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் GOAT. ஜாலியான  படங்களை கொடுத்த வெங்கட் பிரபு தான் இப்படத்தை இயக்கி வருகிறார். மேலும் நீண்ட கேப்புக்கு பிறகு விஜய்யுடன் யுவன் சங்கர் ராஜா இணைந்துள்ளார்.

அதுமட்டுமின்றி படத்தில் விஜய்யுடன் சேர்ந்து பிரபு தேவா, பிரசாந்த், சினேகா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின்  போஸ்டர் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச்சை கொடுத்தது. குறிப்பாக விசில் போடு பாடல் தியேட்டரையே அதிர வைக்க போகுது என்று கூட சொல்லலாம்.

அந்த அளவுக்கு பாடல் வெறித்தனமாக உள்ளது. அதுமட்டுமின்றி விஜய் குரலில் 2வது வெளியான “சின்ன சின்ன கண்கள்” சாங் பாடலும் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானது.

இதனை தொடர்ந்து கோட் படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் தளபதி விஜய் கோட் படத்தை கூறி கூறிய முதல் விமர்சனம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

Also Read: சூப்பர் ஸ்டார் உருவம் பொறித்த தங்க நாணயம் –  பாரீஸ் க்ரெவின் மியூசியம் வெளியீடு – ரசிகர்கள் பெருமை!!

அதாவது கோட் படத்தின் முதல் பாதியை படத்தின் கதாநாயகனுக்கு வெங்கட் பிரபு போட்டு காட்டியுள்ளார். படத்தை பார்த்துவிட்டு விஜய் வெங்கட் பிரபுவிடம் ‘படம் தெறிக்குது’ என கூறியுள்ளாராம்.

இதன்மூலம் படம் வேற லெவலில் வந்துள்ளது என்று சினிமா வட்டாரங்களில் பேசி வருகிறார்கள். boxoffice king

மேலும் படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் இறுதியில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. world best dancer

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *