இணையத்தில் வெளியான உறுப்பினர் சேர்க்கை படிவம்?.., தவெக தலைமையகம் வெளியிட்ட முக்கிய அறிக்கை!!இணையத்தில் வெளியான உறுப்பினர் சேர்க்கை படிவம்?.., தவெக தலைமையகம் வெளியிட்ட முக்கிய அறிக்கை!!

தமிழக வெற்றிக் கழகம்

நடிகர் விஜய் சமீபத்தில் தனது கட்சியின் பெயரை அறிவித்த நிலையில், தற்போது சோசியல் மீடியா முழுவதும் அவரை பற்றி தான் நெட்டிசன்கள் பேசி வருகின்றனர். சொல்ல போனால் அவர் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகம் இருந்து வருகிறது. ஆனால் நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் 2026ம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற பொது தேர்தல் தான் இலக்கு என்று “தமிழக வெற்றிக் கழகம்” கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி தேர்தலுக்குள் கட்சியில் 2 கோடி உறுப்பினர்களை சேர்ப்பது தான் நம்முடைய இலக்கு என்றும் தெரிவித்துள்ளார். அதற்கான பணிகளில் கட்சி ஊழியர்கள் முழு வீச்சில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராக சேர படிவம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஆனால் அந்த படிவம் முற்றிலும் போலியானதாம், கட்சி உறுப்பினர் சேர்க்கை செயலி மூலமாக தான் நடைபெறும் என்று கட்சி தலைமையகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

சீமானுக்கு விழும் அடிமேல் அடி.., “நாம் தமிழர் கட்சி”யில் இருந்து விலகிய முக்கிய புள்ளி.., அவரே வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *