விக்ரம் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தங்கலான் படக்குழு - இத யாருமே எதிர்பார்க்கல?விக்ரம் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தங்கலான் படக்குழு - இத யாருமே எதிர்பார்க்கல?

விக்ரம் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தங்கலான் படக்குழு: தென்னிந்திய தமிழ் சினிமாவில் கமலுக்கு அடுத்து ஒரு கதாபாத்திரத்திற்காக உடலை வருத்தி நடிப்பவர் தான் சியான் விக்ரம். தற்போது இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தங்கலான். பா ரஞ்சித் படைப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் ஷூட்டிங் அண்மையில் முடிவடைந்த நிலையில், அடுத்தகட்ட பணிகளில் படக்குழு இருந்து வருகிறது.

விக்ரம் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தங்கலான் படக்குழு
விக்ரம் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தங்கலான் படக்குழு

மேலும் பான் இந்திய படமாக உருவாகியுள்ள தங்கலான் திரைப்படம் கடந்த ஜனவரி 26ம் தேதி வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் சில காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளி போய் கொண்டே இருக்கிறது. இதனால் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கும் நிலையில், தற்போது தங்கலான் படக்குழு சூப்பர் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது சியான் விக்ரம் இன்று 57வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு வாழ்த்து கூறும் விதமாக தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியீட்டு படக்குழு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. மேலும் விக்ரமுக்கு சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர். 

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் – என்னது கணவனை இழந்தவருக்கு செங்கோல் கொடுக்க கூடாதா? உயர் நீதிமன்றம் காட்டம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *