
“தனி ஒருவன் 2” படத்தில் வில்லனாக நடிக்கும் சூப்பர் ஸ்டார் வாரிசு: திரைத்துறையில் வெளியாகும் ஒரு சில படங்கள் ரசிகர்களால் மறக்க முடியாத படமாக அமையும். அப்படி ரசிகர்களை ரசிக்க ரசிக்க பார்க்க வைத்த ஒரு படம் என்றால் அது மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான தனி ஒருவன் தான். ஜெயம் ரவி, நயன்தாரா நடித்த இப்படத்தின் மூலம் வெயிட்டான வில்லனாக நடித்தவர் தான் அரவிந்த்சாமி.

அவருடைய கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக இப்படத்திற்கு கூடுதல் பிளஸாக ஹிப்ஹாப் ஆதியின் மிரட்டலான இசை அமைந்தது. எனவே இந்த படத்தோட செகண்ட் பார்ட் எப்பொழுது என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். இதற்கிடையில் தனி ஒருவன் 2 படத்தின் பூஜை யாருக்கும் தெரியாமல் நடந்து முடிந்தது.
இப்படத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடிக்க இருக்கும் நிலையில், வில்லனாக யார் நடிக்க போகிறார் என்பது குறித்து எந்த ஒரு தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில் தனி ஒருவன் 2 படத்தின் வில்லன் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஜெயம் ரவி நடிக்கும் தனி ஒருவன் 2 படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகரும் அமிதாப் பச்சனின் மகனுமான அபிஷேக் பச்சன் வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. jayam ravi – mohan raja – nayanthara – Abhishek Bachchan –
பிரிட்டானியா நிறுவனத்திற்கு ரூ. 60 ஆயிரம் அபராதம் – நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி உத்தரவு!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
“கிங்” கான் மருத்துவமனையில் அனுமதி
குற்றாலத்தில் குளிக்க புதிய கட்டுப்பாடு
சவுக்கு சங்கர் மீது கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் தாயார் புகார்