
தஞ்சை ஆசிரியை கொலை: தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் தான் ரமணி. வழக்கம் போல் பள்ளிக்கு சென்று பாடம் நடத்தி வந்த ரமணியை மதன் (30) என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார்.
தஞ்சை ஆசிரியை கொலை – மல்லிப்பட்டினம் பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!
இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது அந்த பள்ளிக்கு சென்று அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு செய்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ” ஆசிரியை கொலை செய்யப்பட்ட அரசு பள்ளிக்கு இன்று முதல் ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – இனி 50-50 work from home ஆப்ஷன் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
மேலும் பள்ளி மாணவர்கள் இடையே தற்போது ஏற்பட்டுள்ள அச்ச உணர்வை போக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற கொடூரமான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும். அதுமட்டுமின்றி, மாணவர்களுக்கு மன அழுத்தத்தை போக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மல்லிப்பட்டினம் அரசு பள்ளியில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
Jaguar நிறுவனத்தின் பிரபலமான லோகோ மாற்றம்
தென்தமிழ்நாட்டில் கனமழைக்கான ரெட் அலர்ட் (20.11.2024)