தற்போது வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளில் மிகவும் முக்கியமானது நாய்கள். அவ்வாறு வளர்க்கப்படும் நாய்கள் உரிமையாளர்களின் உற்ற நண்பராகவும் மற்றும் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக கருதப்படுவதில் ஆச்சிரியமில்லை. மேலும் இந்த அளவிற்கு நேசித்து வளர்க்கப்படும் நாய்களின் சேட்டையும், குறும்புத்தனமும் வளர்க்கும் உரிமையாளர்களுக்கு அவ்வப்போது பெரும் தொல்லைகளை அளித்து வருகிறது. இதே போன்ற சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அதாவது, அமெரிக்காவில் செசில் என்ற நாய் தனது உரிமையாளர் வைத்திருந்த 3 லட்சம் பணத்தை சாப்பிட்டு முழுங்கியுள்ளது. இதனை தொடர்ந்து உரிமையாளர் தான் வைத்திருந்த மாயமானதை எண்ணி அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!!
மேலும் காணாமல் போன பணம் எங்கே என தேடிய போது இவர் ஆசையாக வளர்த்த செசில் நாய் திடிரென வாந்தி எடுத்த நிலையில் காணாமல் போன ரூபாய் நோட்டுகளை சாப்பிட்டு விழுங்கி உள்ளது என்று தெரிய வந்துள்ளது. செய்வதறியாது திகைத்து நின்ற உரிமையாளர் மேலும் நாய் விழுங்கிய பணத்தில் RS.38000 ரூபாய்யை இன்னும் வெளியே எடுக்க முடியவில்லை என்றும் மீட்கப்பட்ட பெரும்பாலான நோட்டுகளை கழுவி சுத்தம் செய்து வங்கியில் மாற்றியுள்ளார். இது போன்று நடப்பது இதுவே முதல்முறை என்று நாயின் உரிமையாளர் வேதனை அடைந்துள்ளார்.