
Guinness record: உலகில் 180 அடி நீளமான சைக்கிள் கண்டுபிடிப்பு: இன்றைய உலகத்தில் வாழும் மக்கள் ஏதாவது சாதனையை செய்ய வேண்டும் என்று தினந்தோறும் சோறு தண்ணி இல்லாமல் அதை பற்றியே சிந்தனை செய்து வருகின்றனர்.
ஒரு சிலர் சில கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து அதன் மூலம் கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர்.
உலகில் 180 அடி நீளமான சைக்கிள் கண்டுபிடிப்பு
அந்த வகையில் தற்போது நெதர்லாந்தை சேர்ந்த பொறியாளர்கள் ஒரு கின்னஸ் சாதனை செய்துள்ளனர். அதாவது உலகிலேயே மிக நீளமான சைக்கிளை 8 டச்சு பொறியாளர்கள் தயாரித்து சாதனை படைத்துள்ளனர்.
இந்த சைக்கிள் கிட்டத்தட்ட 180 அடி நீளம் கொண்டவை. இதனால் இந்த சைக்கிள் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
மேலும் இதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெர்னி ரியான் என்பவர் 155 அடி நீளமுள்ள சைக்கிளை தயாரித்து இருந்தார்.
அதை தான் உலகிலேயே நீளமான சைக்கிள் என்ற சாதனையை வைத்திருந்தது. தற்போது அதை முறியடிக்கும் விதமாக, 8 டச்சு பொறியாளர்கள் சேர்ந்து 180 அடி நீள சைக்கிளை உருவாக்கியுள்ளனர்.
Also Read: உ.பியில் மத பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் உயிரிழப்பு – கண்கலங்க வைக்கும் வீடியோ வைரல்!!
இந்த டச்சு குழுவில் இருக்கும் இவான் ஷால்க் என்ற 39 வயது பொறியாளர் தனது சிறு வயதில் இருந்தே இந்த நீளமான சைக்கிளை உருவாக்க வேண்டும் என்று கனவு கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது.
முதன் முதலில் நீளமான( 26 அடி) சைக்கிள் கடந்த 1965 ஆம் ஆண்டு ஜெர்மனியில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு இதை கிளிக் செய்யுங்கள்
NEET Re-Exam Result 2024 – நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியீடு
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை
Gas Cylinders Price: கேஸ் சிலிண்டர் விலை குறைவு
ஆர்சிபியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக தினேஷ் கார்த்திக் நியமனம்