
24 கேரட் தங்கத்துல கேக்
லெஜெண்ட் சரவணன் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனம் பெற்ற திரைப்படம் தான் தி லெஜெண்ட்”. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஊர்வசி ரவ்தொலா. பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருந்து வரும் இவர் தற்போது நிற்க கூட நேரம் இல்லாமல் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது தனது 30-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை தொடர்ந்து ஒரு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

இதில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால் அந்த கேக் 24 கேரட் தங்கத்தால் செய்யப்பட்டது. சொல்ல போனால் அந்த கேக்கின் விலை 3 கோடி இருக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும் அந்த கேக்கை பாடகர் ஹானி சிங் தான் பரிசாக வழங்கினார் என்று கூறப்படுகிறது. இப்படி தங்க கேக்கை வெட்டி அலப்பறை செய்த நடிகை ஊர்வசிரவ்தொலாவை பற்றி தான் பாலிவுட்டில் பெரும் பேச்சாக இருந்து வருகிறது. தற்போது அந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.