Breaking News: ரயில்வே துறையை டீலில் விட்ட மத்திய அரசு: இந்தியாவில் கடந்த சில மாதங்களாக ரயில் விபத்துகள் அதிகமாக அரங்கேறி வருகிறது. சமீபத்தில் கூட ஒடிசா ரயில் விபத்தில் 296 பேர் பலியாகி இருந்த சம்பவம், ஆந்திராவில் பலாசா பயணிகள் ரயில் விபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் மூழ்க செய்தது.
ரயில்வே துறையை டீலில் விட்ட மத்திய அரசு
இப்படி இருக்கையில் இந்த ரயில் விபத்து முற்றிலும் எப்போது குறையும், அதற்கான பட்ஜெட் தாக்கலில் ரயில்வே துறை இடம்பெறுமா என்று பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை 11 மணி அளவில் இருந்து கிட்டத்தட்ட 1.16 மணி நேரமாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்து வந்தார்.
அதில் ஒரு கோடி இளைஞர்களுக்கு புதிய இன்டர்ன்ஷிப் பயிற்சி திட்டம், மின் ஆலை மற்றும் வெள்ளத்தடுப்பு அமைக்க ரூ.32,900 கோடி திட்டம், நகர்புறங்களில் வீடு – 1 கோடி பேருக்கு நிதி திட்டம், வெள்ள பாதிப்பு, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மாநில அரசுகளுக்கு வட்டியில்லா கடன், மொபைல் போன் விலை குறைய வாய்ப்பு, பிரதமரின் சூரிய வீடுகள் இலவச மின்சார திட்டம், தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி குறைப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
Also Read: வேலை பார்க்கும் பெண்களுக்கு சூப்பர் திட்டம் – நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு!!
ஆனால் ரயில்வே துறை சம்பந்தமான எந்த ஒரு நிதியும் ஒதுக்கவில்லை. ஏன் அதை பற்றி ஒரு திட்டம் கூட வகுக்கவில்லை. இந்த ஆண்டு அதிகமான நிதி ரயில்வே துறைக்கு ஒதுக்கப்படும் என பலரும் எதிர்பார்த்த நிலையில், தற்போது மத்திய அரசு ரயில்வே துறையை மறந்து விட்டதா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ராஜஸ்தான் அணியில் சேரும் ராகுல் டிராவிட்?
திருச்சி சிறப்பு முகாமிலிருந்து இலங்கை கைதி தப்பி ஓட்டம்
நீட் தேர்வில் 11000 மாணவர்கள் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றுள்ளனர்
பெங்களூருவை 5 மண்டலங்களாக பிரிப்பு