திரிஷா கதாநாயகியாக நடித்திருக்கும் லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் வெளியாக இருக்கின்றது. இந்நிலையில் திரிஷாவின் ” தி ரோடு ” என்னும் திரில்லர் திரைப்படம் அக்டோபர் 6ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.’ தி ரோடு ‘ தமிழ் , தெலுங்கு , ஹிந்தி போன்ற மொழிகளில் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தி ரோடு கதை இது தான்.
தி ரோடு கதை இது தான் ! வெளியான தகவல் இதோ !
‘ தி ரோடு ‘ படக்குழு :
திரிஷா தி ரோடு திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருக்கின்றார். மேலும் சந்தோஷ் பிரதாப் , ஷபீர் கல்லரக்கல் , வேல ராமமூர்த்தி , விவேக் பிரசன்னா மற்றும் எம்.எஸ். பாஸ்கர் போன்றவர்கள் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். அருண் வசீகரன் திரைப்படத்திற்கு கதை எழுதியும் இயக்கியும் உள்ளார். திரைப்படத்தினை ஏஏஏ சினிமா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிப்பு செய்துள்ளது. சாம் சிஎஸ் என்பவர் திரைப்படத்திற்கு இசை அமைத்து இருக்கின்றார்.
JOIN WHATSAPP GROUP | CLICK HERE |
கதை – ‘ தி ரோடு ‘ :
NH 44 என்பது இந்தியாவையும் ஸ்ரீநகரையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை. இந்த நெடுஞ்சாலையில் மட்டும் அடுத்தடுத்து விபத்துகள் நடக்கின்றது. விபத்துகளில் சிக்குபவர்கள் அனைவரும் இறந்து விடுகின்றனர். இந்த விபத்துகளில் திரிஷாவுக்கும் சம்மந்தம் இருக்கின்றது. விபத்துகளும் , மர்மங்களும் இந்த சாலையில் நிறைந்து இருக்கின்றது.
ஏதேனும் அமணுஷ சக்திகள் தான் விபத்திற்கு காரணம் என்று நெடுஞ்சாலை அருகில் இருப்பவர்கள் எண்ணுகின்றார்கள். விபத்திற்க்கான காரணம் என்ன என்று தேடும் முயற்சியில் திரிஷா ஈடுபடுகின்றார். அப்போது விபத்துகளுக்கு பின்னல் ஏதேனும் குற்ற சம்பவங்கள் செய்யும் குழு இருக்கின்றது என்பதை கண்டு பிடிக்கின்றார்.
கும்பலை எப்படி கண்டு பிடித்தார் என்றும் நெடுஞ்சாலையில் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படாமல் திரிஷா தடுத்தாரா என்பதே திரைப்படத்தின் இறுதி கதை என்று தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குனர் கருத்து :
தி ரோடு திரைப்படத்தினை குறித்து இயக்குனர் அருண் வசீகரன் கூறியதாவது. ‘தி ரோடு என்னும் திரைப்படம் எனக்கு முதல் திரைப்படம் தான். உண்மை சம்பத்தினை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. மதுரைக்கு அருகில் நடந்திருக்கும் இந்த உண்மை கதை என்ன என்பது தனக்கு தெரியும். மேலும் இந்த சம்பவம் செய்திகளில் எப்படி வெளியானதை நேரடியாக பார்த்துள்ளேன். இந்த திரைப்படத்திற்கு என்று மூன்று ஆண்டுகள் தகவல்களை பெற்றுக்கொண்டு தான் தற்போது இயக்கியுள்ளேன் ‘ என்று கூறியுள்ளார்.
ஜீ தமிழ் தவமாய் தவமிருந்து சீரியல் ! எண்டு கார்டு போட்டாச்சு !
திரிஷா & தி ரோடு :
கடந்த 20 ஆண்டுகளுக்கு பின் திரிஷா மதுரை வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். மே மாதத்தில் தான் பெரும்பாலான படப்பிடிப்பு நடத்தப்பட்டு உள்ளது. படப்பிடிப்பின் போது இருந்த வெயில் , நெடுஞ்சாலை பரபரப்பு இவைகளில் திரிஷா மிகவும் அர்ப்பணிப்பாக திரைப்படத்தில் நடித்துள்ளார். முக்கியமாக கதாநாயகியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு உள்ள இந்த திரைப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்பது ரசிகர்களின் நம்பிக்கை.
பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பின் திரிஷா நடிப்பில் தி ரோடு திரைப்படம் வெளியாகி உள்ளது. திரைப்படத்தின் ட்ரெய்லர் இணையதளத்தில் வெளியாகியது. அதிக பார்வையாளர்களை பெற்றும் வருகின்றது. பழிவாங்குதல் மற்றும் திரில்லர் கதையாக அக்டோபர் 6ல் திரையரங்கில் வெளியாகும் இத்திரைப்படமும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.