தி சபர்மதி ரிப்போர்ட் படத்திற்கு வரிவிலக்கு - பாஜக அரசு அறிவித்துள்ளது !தி சபர்மதி ரிப்போர்ட் படத்திற்கு வரிவிலக்கு - பாஜக அரசு அறிவித்துள்ளது !

தற்போது தி சபர்மதி ரிப்போர்ட் படத்திற்கு வரிவிலக்கு அந்த வகையில் மத்திய பிரதேச பாஜக அரசு வரி விளக்கு அளித்துள்ளது. மேலும் இப்படம் திட்டமிட்ட அரசியல் பிரச்சார படம் என்ற விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

அத்துடன் எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே அரசியல் செய்து வருவதாக மத்தியபிரதேச முதல்வர் மோகன் யாதவ் விமர்சித்துள்ளார்.

‘தி சபர்மதி ரிப்போர்ட்’ என்ற ஹிந்திப் படம் கடந்த 15ம் தேதி வெளியானது. இயக்குநர் நீரஜ் சர்மா இயக்கி உள்ள இந்த படத்தில் விக்ராந்த் மாஸே, ராஷி கண்ணா, ரிதி துர்கா, பர்கத் சிங் உள்பட பலர் நடித்துள்ளனர்.

அத்துடன் ஏக்தா கபூர், ஷோபனா கபூர் தயாரித்துள்னர். மேலும் இந்த படம் குஜராத்தில் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ளது.

கடந்த 2002-ம் ஆண்டு, அயோத்தியில் இருந்து சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் ராம பக்தர்கள் சிலர் குஜராத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் நிலையத்தில் ஒரு கும்பல் ரயில் பெட்டிக்கு தீவைத்ததில் 50க்கு மேற்பட்ட ராம பக்தர்கள் பலியானார்கள்.

அத்துடன் குஜராத் கலவரத்துக்கு இச்சம்பவம் வித்திட்டது. இந்த சம்பவத்தின் போது நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்தார். மேலும் இந்த கலவரத்திற்கு மோடியே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது.

தற்போது இந்த தி சபர்மதி ரிப்போர்ட் படம் ரயில் எரிப்பு சம்பவம் மற்றும் கலவரம் குறித்து வேறு கோணத்தில் காட்டுகிறது.

அத்துடன் இந்த படத்தை பாராட்டி பலரும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். அதில் ஒருவரின் பதிவை டேக் செய்து பிரதமர் நரேந்திரமோடி தனது எக்ஸ் தளத்தில் “சரியாக சொன்னீர்கள். உண்மை வெளிவந்தது நல்ல விஷயம்.

அதுவும் பொதுமக்கள் பார்க்கும் வகையில் வந்துள்ளது. பொய்க்கதை குறுகிய காலம்தான் நீடிக்கும். கடைசியாக உண்மை வெளிவந்தே தீரும்” என்று எழுதியுள்ளார் என்று தெரிவித்திருந்தார்.

பாலாவின் வணங்கான் திரைப்படம் பொங்கல் 2025 ல் வெளியீடு – படக்குழு அறிவிப்பு !

இந்நிலையில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பாவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட தி சபர்மதி ரிப்போர்ட் படத்திற்கு மத்திய பிரதேச பாஜக அரசு வரி விளக்கு அளித்துள்ளது.

மேலும் இப்படம் திட்டமிட்ட அரசியல் பிரச்சார படம் என்ற விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

அத்துடன் எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே அரசியல் செய்து வருவதாக மத்தியபிரதேச முதல்வர் மோகன் யாதவ் விமர்சித்துள்ளார். இதற்க்கு முன்னதாக பிரதமர் நரேந்திரமோடி தி சபர்மதி ரிப்போர்ட் படத்தை பாராட்டியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *