இருவிழிகள் அங்கும் இங்கும் தேட, இருதயம் துடிக்கும் அளவுக்கு அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தாள் கருணா.
ஆனால் ரிஷியின் முகத்தை அவளால் பார்க்க முடியவில்லை. சோர்ந்து போன அவள் அருகில் இருந்த மரத்தில் சற்று சாய்ந்து அவனுக்காக காத்து கொண்டிருந்தாள்.
அந்த பக்கம் ரிஷியின் நண்பர்களை காவல்துறை ரவுடி தனம் பண்றீங்களா என்று கூறி அடித்து கொண்டிருந்தனர்.
இந்த சம்பவத்துக்கு காரணமான கதிரவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து மதுபான கடையில் மது அருந்திவிட்டு சந்தோஷமாக இருக்கிறான்.
போலீஸ் ஸ்டேஷனில் ரிஷியை அழைத்து செல்ல அவனுடைய அப்பா வருகிறார். ஸ்டேஷனுக்குள் நுழைந்து கொஞ்சம் கூட யோசிக்காமல் ரிஷியை கன்னத்தை சேர்த்து அடித்து என் மாணத்தையே வாங்கிட்டியேடா என்று கூறுகிறார்.
போலீஸ் மிரட்டி இது போல் யாரும் செய்ய கூடாது என்று கண்டித்து அனுப்பினார்.
வெளியே வந்தவுடன் ரிஷி இதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கூற மீண்டும் கண்ணத்தில் அடித்து ஒழுங்கா இருந்து College க்கு போற வழியா பாரு என்று கூறி அங்கிருந்து அவருடைய அப்பா கிளம்புகிறார்.
கண் கலங்கிய படி ரிஷி College-க்கு சென்றான். அவன் வருகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த கருணா மரத்தில் சாய்ந்தபடி ரிஷியை பார்க்கிறாள்.
அவள் மனதுக்குள் ஏதோ அடித்து கொண்டிருந்தது. ரிஷிக்கு என்னதான் ஆனது என்று. கண் கலங்கி வந்த அவனை நோக்கி கருணா கால்கள் ஓட தொடங்கின.
கல்லூரியில் முகப்பு வாயிலுக்கு அருகில் இருந்த ஒரு ஸ்டோன் பெஞ்சில் நண்பர்களுடன் அமர்ந்திருந்தான் ரிஷி.
அப்போது பேசிய அவன் எனது வாழ்க்கையில் எப்படிடா நிம்மதியா இருக்க போறோம்ன்னு தான் எப்பவுமே தோணுது?
” சின்ன வயசுல அம்மா அப்பா பாசம் கிடைச்சா நிம்மதின்னு தோணுச்சு
10வது Pass ஆன நிம்மதின்னு தோணுச்சு – அப்புறம்
12வது Pass ஆன நிம்மதின்னு தோணுச்சு – இப்ப
College-ல Pass ஆன நிம்மதின்னு தோணுது – அப்புறம்
நல்ல வேலை கிடைச்ச நிம்மதின்னு தோணுது – அப்புறம்
நல்ல பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணா நிம்மதின்னு தோணுது – அப்புறம்
குழந்தையை நல்லா படிக்க வச்சா நிம்மதின்னு தோணுது – அப்புறம்
அந்த பிள்ளைகளுக்காக ஏதாச்சும் சேத்து வச்சா நிம்மதின்னு தோணுது” – என்று
ரிஷி சோகமான வரிகளை பேசி வருத்தப்பட்டு கொண்டிருக்கும் போது, நடுவில் நண்பன் ஒருவன் ” விடுடா மச்சி கடைசில செத்தா நிம்மதின்னு தோணும்டா ” இது உனக்கு மட்டும் இல்ல எல்லா ஆம்பளைக்கும் பொருந்தும்டா என்று அவனை தேற்றுகிறார்கள்.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
அங்கிருந்து எல்லாரும் கலைந்து சென்று கல்லூரி நிகழ்ச்சிக்கு Vibe பண்ண ரெடியாகுறாங்க.
அப்போது தனிமையில் இருந்த ரிஷியிடம் கருணா பேச தொடங்குகிறாள்.
என்ன ஆச்சு, ஏன் இவ்வளவு Sad இருக்க.. ரிஷி என்ன ஆனாலும் நான் இருக்கேன் என்று அவ கூற, சட்டென்று அவனது மனம் பறக்க தொடங்கி விட்டது.
அந்த தருணத்தில் ஏதார்த்தமாக கல்லூரி விழாவில் இளையராஜாவின் “காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில்” என்ற பாடல் ஒலிக்கிறது
தானா அமைந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரிஷி அவளிடம் Propose செய்ய நினைக்கிறான். அப்போது கரெட்டாக அவனது நண்பர்கள் Dance க்கு டைம் ஆச்சு வாடா என்று கூப்பிடுகிறார்கள்.
இந்த பக்கம் கல்லூரி மேடையில் ரிஷி அற்புதமாக நடனமாடுகிறான். அவனின் Dance க்கு எல்லாரும் கைதட்டி ஆரவாரம் செய்கின்றனர். அந்த பக்கம் கதிரவன் மதுக்கடையில் ஆட்டம் போடுகிறான். அங்கிருப்பவர்கள் அவனை கழுவி கழுவி ஊற்றுகின்றனர்.
கல்லூரியில் நடனத்தை முடித்து விட்டு அவன் Stage-ல் இருந்து கீழே இறங்கும் பொழுது, வெளிர்ந்த கண்ணங்கள் கண்ணில் ஓரம் சிறு ஈரத்துடன் சூப்பரா ஆடுனா நானே எதிர்பார்க்கல என்று கையை கொடுத்து பாராட்டுகிறாள் கருணா.
ரிஷியை தனியாக பேச அழைத்த கருணாவிடம் காதலை சொல்ல அவன் தட்டு தடுமாறியபடி நிற்கிறான்.
ஆனால் அதற்குள் கருணா, ” இந்த உலகத்துல யாரும் காற்றை பார்த்தது இல்லை.. ஆனால் அதற்கு உயிர் இருக்கிறது. அதே போல உன்மேல் நான் வைத்த காதலும் யார் கண்ணுக்கும் தெரிவதில்லை. அதுக்கும் உயிர் இருக்குன்னு” கூறி, கையில் இருந்த dairy milk chocalate யை கொடுத்து “I LOVE YOU” என்று சொல்லுகிறாள்.
என்ன பேசுவதென்றே தெரியாமல் திகைத்து நின்ற அவனை கட்டி தழுவி, உனக்கு இன்னொரு அம்மாவா நான் இருப்பேன் என்று கூறுகிறாள்.
அப்போது தனது அம்மா அப்பாவிடம் கிடைக்காத ஒரு உணர்வை அவளிடம் கண்டான் ரிஷி.
தொடரும்..,