Home » கதைகள் » “தெகட்டாத காதல்” – இரு மலர் பூ பூத்த அழகிய காதல் கதை – (எபிசோடு 7) இதோ!

“தெகட்டாத காதல்” – இரு மலர் பூ பூத்த அழகிய காதல் கதை – (எபிசோடு 7) இதோ!

“தெகட்டாத காதல்” – இரு மலர் பூ பூத்த அழகிய காதல் கதை – (எபிசோடு 7) இதோ!

“தெகட்டாத காதல்” – இரு மலர் பூ பூத்த அழகிய காதல் கதை: போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற ரிஷியை வெளியே எடுக்க அவருடைய வருங்கால மச்சான் வக்கீலுடன் வந்துள்ளார்.

அங்கு எதற்காக அவரை கைது செய்தீர்கள் என்று கேள்வி கேட்கிறார். சுண்ணாம்பு  பாக்கெட் போல போதை பொருளை கடத்தி உள்ளான். அந்த பொருளை எங்கே மறைத்து வச்சிருக்கான் என்று கேட்டு சொல்லுங்கள் என்று போலீஸ் கூறுகிறார்.

இதற்கு ரிஷி எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை மாமா, நான் Friend பார்க்க தான் போனேன்., அதுக்குள்ள இப்படி செஞ்சுட்டாங்க என்று அழுகிறான்.

உடனே எதன் அடிப்படையில் அவரை கைது செய்தீர்கள் என்று வக்கீல் கேட்ட நிலையில், சந்தேகத்தின் பேரில் தான் ரிஷியை கைது செய்ததாக தெரிய வந்தது.

இதையடுத்து ரிஷியை ஜாமீன் எடுத்த நிலையில் ஊரை விட்டு எங்கேயும் வெளியே போக கூடாது என்று கண்டித்து போலீஸ் அவனை அனுப்பி வைத்தனர்.

ரிஷியை அழைத்து  மஹாலுக்கு செல்கின்றனர்.

அங்கு ரிஷியை பார்த்த தந்தை கன்னத்தில் அடித்து, இன்னும் எத்தனை தடவை எங்களை கேவலப்படுத்த போற என்று கல்யாண மண்டபத்தில் அனைவர் முன்னாடி அசிங்கப்படுத்துகிறார்.

அந்த பக்கம் கதிரவன் போதை பொருளை கை மாற்றுகிறார். மீதி பணத்தை செட்டில்மென்ட் பேசிய அந்த கூட்டாளிகளிடம் இல்லை எனக்கு பணம் தேவையில்லை. இனிமேல் இது மாதிரியான காரியத்துக்கு என்னை அழைக்காதீர்கள் என்று கூறி அங்கிருந்து கிளம்புகிறான்.

ஹாஸ்பிடலுக்கு சென்ற கதிரவன் அழகியை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து செல்கிறான்.

செல்லும் வழியில் யாழினியை சிலர் துரத்துவதை பார்த்து அதிர்ச்சி அடைகிறான் கதிரவன்.

உடனே அவளை காப்பாற்ற அழகியை  ஒரு பஸ் ஸ்டாண்டில் பாதுகாப்பாக வைத்து விட்டு, யாழினியை காப்பாற்ற ஓடுகிறான்.

அவளை துரத்தி சென்ற ஒவ்வொருவரையும் அடித்து கொண்டே செல்கிறான். இறுதியாக யாழினியிடம் என்ன ஆனது யாரு அவங்க என்று கேட்கிறான்.

அதற்கு நான் உன்ன லவ் பண்றது என் அப்பாக்கு தெரிஞ்சு போச்சு, அதை கேட்டு ஷாக்கான கதிரவன் என்னடி சொல்லுற, நீ என்ன லவ் பண்றியா இத ஏன் என்கிட்ட நீ சொல்ல என்று கண் கலங்கிறான்.

சின்ன வயசுல இருந்தே எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும். உனக்கே தெரியாமல் உன்னிடம் இருந்து எத்தனையோ பொருளை நான் எடுத்து வச்சிருக்கேன். அத பார்த்து தான் என் அப்பா என்னை அடித்து அறைக்குள் பூட்டி வச்சுட்டாரு.

அங்கிருந்து எப்படியோ தப்பிச்சுட்டேன். அதை பார்த்த அப்பா என்னை கொல்ல ஆளு அனுப்பிட்டாரு.

அப்போது தான் நீங்க வந்தீங்க, என்று அவனை கட்டி அணைக்கிறான்.

அந்த பக்கம், மகாலில் கண்ணீர் வடிந்த படி ரிஷி உட்கார்ந்து இருக்கிறான். அப்போது அங்கு வந்த கருணா என்னாச்சு என்று கேட்க, அவளை கட்டி தழுவிய ரிஷியின் தலையை கோதி விட்டு விடு அழுகாத நான் இருக்கிறேன்.

அந்த சமயத்தில் தனது மகனை எல்லாரு முன்னாடி அடித்ததை நினைத்து பார்த்த ரிஷி அப்பாவுக்கு நெஞ்சு வலி ஏற்படுகிறது.

உடனே அவரை அங்கிருந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெறுகிறது.

ரிஷி குடும்பத்தினர் எல்லாரும் அப்பாவை காப்பாற்ற பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

அந்த பக்கம் யாழினியையும் அழகியையும் கூட்டிக்கொண்டு திருமங்கலத்தில் உள்ள மாமன் வீட்டுக்கு அழைத்து செல்கிறான்.

தொடரும்..,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top