தெகட்டாத காதல் எபிடோடு 7
“தெகட்டாத காதல்” – இரு மலர் பூ பூத்த அழகிய காதல் கதை: தாய்மாமன் வீட்டுக்கு சென்ற கதிரவனை மாமன் முத்துக்குமார் அரவணைத்து தன்னுடைய வீட்டில் தங்க வைக்கிறார்.
இதற்கிடையில் யாழினியின் அப்பா தனது ஆட்களை வைத்து மதுரையை சுற்றி தேடி வருகின்றனர். அதுவும் தனது மகளை பார்த்தவுடன் கொள்ளுங்க,அவனை கூட்டிட்டு போன கதிரவன் குடும்பத்தோடு கொள்ளுங்கள் என்று யாழினி அப்பா கூறுகிறார்.
அந்த பக்கம் மருத்துவமனையில் ரிஷியின் அப்பாவுக்கு அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்த நிலையில், அப்பாவை பார்க்க முடியாமல் ரிஷி வீட்டில் கருணாவுடன் இருக்கிறான்.
“தெகட்டாத காதல்” – இரு மலர் பூ பூத்த அழகிய காதல் கதை
அவளோ எல்லா விதத்திலும் ரிஷுக்கு ஆறுதல் கூறிய நிலையில், அவனோ எல்லா கஷ்டங்களையும் அடக்கி கொண்டு மருத்துவமனையில் உள்ள அப்பாவை பார்க்க ரிஷியும் கருணாவும் சென்றனர்.
அங்கேயோ ரிஷி அப்பா தனது மகனை எல்லார் முன்னாடியும் அடித்து விட்டேனே, என்று மனதுக்குள்ளே போட்டு வருத்தி கொண்டிருந்தார்.
அந்த சமயம் ரிஷி உள்ளே செல்கிறார். என்னைய மன்னித்து விடுயா, நான் எப்போதும் உனக்கு நான் நல்ல அப்பாவா இருந்தது இல்ல. உனக்கு பிடிச்சது எதுவுமே நான் செஞ்சது இல்ல. இருந்தும் நீ எதுவும் என்ட கேட்டது இல்ல. உன்ன நல்ல வளர்க்கணும்னு தான் நான் நினைச்சேன். அதனால் தான் உன்கிட்ட சிடுசிடுனு இருந்துட்டேன், என்னை மன்னித்துவிடு என்று அப்பா ரிஷியை கட்டி அணைத்த படி கண் கலங்குகிறார்.
அதெல்லாம் ஒன்னும் இல்ல அப்பா, நான் எப்போதும் தப்பா நினைத்தது இல்லை. என் மேல எந்த தப்பும் இல்லப்பா என்று அவனும் கண்கலங்கி கட்டி அணைக்கிறான்.
ஒருவழியாக அப்பாவும் மகனும் ஒன்று சேர்ந்தனர்.
மறுநாள் குடும்பமாக திருமங்கலத்தில் உள்ள ஒரு மகாலில் ரிஷியின் அக்காவுக்கு திருமணம் நடக்க இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் படு பயங்கரமாக நடைபெற்று வருகிறது.
Also Read: காதல் கதைகள்
இந்த சூழலில் யாழினி இருக்கும் இடத்தை அவருடைய அரசியல்வாதி அப்பா கண்டு பிடிக்கிறார். அவருடைய ஆட்கள் அங்கு சென்று அவளை துரத்துகிறார்கள்.
கதிரவன் அந்த அடி ஆட்களை அடிக்கிறான். அதில் சில பேர் யாழினியை அடிக்க துரத்துகிறார்கள். உடனே யாழினி ரிஷியின் அக்காவுக்கு கல்யாணம் நடைபெறும் மஹாலுக்குள் செல்கிறார்.
அங்கு கருணா அழகான ரெட் கலர் சேலையில் அங்குமிங்கும் சுற்றி திரிந்த நிலையில், அவள் மீது மோதி யாழினி விழுகிறாள். அதை பார்த்த கருணா ரவுடியை பார்த்து யாருடா நீ? அவளை ஏன்டா துரத்துகிற என்று கேட்க அவளை கன்னத்தில் அடிக்கிறான்.
அதை பார்த்த ரிஷி அந்த ரவுடியை ஓங்கி ஒரே மிதி மிதிக்கிறான். உடனே அங்கிருந்த மற்ற ரவுடிகள் ரிஷியை தாக்க தொடங்கினார்கள்.
அதில் இரண்டு பேர் ரிஷியின் கையும் இரண்டு பேர் காலையும் பிடித்த நிலையில் இன்னொரு ரவுடி கத்தியை எடுத்து அவனை குத்த வருகிறார்.
அந்த சமயத்தில் என்ட்ரி கொடுத்த கதிரவன் ரிஷியின் வயிற்று பகுதியில் குத்த போகும் சமயத்தில் தடுத்து நிறுத்துகிறார்.
உடனே அங்கிருந்த எல்லா ரவுடிகளையும் அடித்து வெளியே துரத்துகிறார்கள். அவர்கள் அடிவாங்குவதை வெளியே ஒரு காரில் நின்று பார்த்த யாழினி அப்பா இனி என் மகளே வேண்டாம் என்று முடிவெடுத்து அங்கிருந்து கிளம்புகிறார்.
அடுத்த நிமிடமே எல்லாம் நல்லபடியாக முடிந்தது. ரிஷியின் அக்கா கல்யாணமும் நல்லபடியாக முடிந்தது.
அதே முகூர்த்தத்தில் கதிரவனுக்கும் யாழினிக்கு திருமணம் நடைபெறுகிறது. ஒரு சில வருடங்களுக்கு பிறகு ரிஷிக்கும் கருணாவுக்கும் திருமணம் நடைபெறுகிறது.
இனிய இன்பமாய் அவர்களின் காதல் வாழ்க்கை தொடங்கியது..,
இனிய வணக்கம்!!