"தெகிடி" பட குணச்சித்திர நடிகர் பிரதீப் விஜயன் திடீர் மறைவு - சோகத்தில் திரையுலகம்!"தெகிடி" பட குணச்சித்திர நடிகர் பிரதீப் விஜயன் திடீர் மறைவு - சோகத்தில் திரையுலகம்!

சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான “தெகிடி” பட குணச்சித்திர நடிகர் பிரதீப் விஜயன் திடீர் மறைவு: தமிழ் சினிமாவில்  தெகிடி. மேயாத மான் உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானவர் தான் நடிகர் பிரதீப் விஜயன். தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ள அவர் சென்னையில் வசித்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் தனியாக தங்கி வந்த இவர், கடந்த இரண்டு நாட்களாக வீட்டின் கதவு திறக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அவருடைய நண்பர்கள் தொடர்ந்து மொபைல் நம்பருக்கு முயற்சி செய்து பார்த்த போதிலும், அவரிடம் இருந்து எந்தவித ரெஸ்பான்ஸ் இல்லாமல் இருந்தது.

இதனால் பத்ரி போன அவருடைய நண்பர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசார் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது நடிகர் பிரதீப் விஜயன் வீட்டில் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் அவர் மாரடைப்பால் இறந்தாரா அல்லது வேறு ஏதாவது நோயால் உயிரிழந்தாரா? என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. அவர் உயிரிழந்த சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. tamil cinema news – kollywood news – supporting actor – death news

கமல்ஹாசன் நடிக்கும் “தக் லைஃப்” ஷூட்டிங் ஸ்பாட் விபத்தில் சிக்கிய நடிகர் – அதிர்ச்சி புகைப்படம் வைரல்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *