Breaking News: தேனி கும்பக்கரை அருவியில் குளிக்க தடை: தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் காரணத்தால் நீர் நிலையங்களில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. இதனால் சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.
தேனி கும்பக்கரை அருவியில் குளிக்க தடை
அந்த வகையில் கும்பக்கரை அருவியில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டு வருவதால் 2வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. இங்கு தினசரி 100க்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர். tamilnadu
மேலும் நேற்று முன்தினம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, வட்டக்காணல், வெள்ளகெவி, பாம்பார்புரம் ஆகிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்த காரணத்தால் அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நேற்று சுற்றுலா பயணிகளை அருவியில் குளிக்க தடை விதித்து உத்தரவிட்டது. theni
Also Read: தமிழ்நாட்டைச் சேர்ந்த 26 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் – அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
இந்நிலையில், நேற்று அருவியில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்ததால் பயணிகள் குளிப்பதற்கு 2வது நாளாக தடை விதிக்கப்பட்டது. மேலும் தண்ணீர் வரத்து குறையும் வரை சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு தடை தொடரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதை கேட்ட சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். kumbakarai falls
திருப்பதி பக்தர்கள் கவனத்திற்கு
தமிழ்நாட்டில் நாளை (13.08.2024) மின்தடை அறிவிப்பு !
தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சி உதயம்