தேனி கும்பக்கரை அருவியில் (19.10.2024) குளிக்க அனுமதி: கும்பக்கரை அருவி தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த அருவிக்கு தினசரி ஏகப்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
தேனி கும்பக்கரை அருவியில் (19.10.2024) குளிக்க அனுமதி
ஏன் சொல்லப்போனால் தேனி மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இப்படி இருக்கையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீர் வரத்து அதிகமாக இருந்து வந்தது.
குறிப்பாக கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கி வந்தது. இதனால் கும்பக்கரை அருவியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.
புதுச்சேரியில் (19.10.24) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – வெளியான முக்கிய அறிவிப்பு!
இதனால் சுற்றுலா பயணிகள் சோகத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில், கும்பக்கரை அருவியில் தற்போது நீர் வரத்து குறைந்து காணப்பட்டு வருகிறது. இதனால் அருவியில் இன்று சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதை கேட்ட சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.
பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் பலி – மீண்டும் அரங்கேறும் சோகம்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி 2024 – 46 ரன்னுக்கு 9 விக்கெட்
ரேஷன் அட்டை தாரர்களுக்கு குஷியான செய்தி
புதிய நீதி தேவதை சிலை திறப்பு – என்னென்ன மாற்றங்கள் தெரியுமா?