திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் தங்க கூடாது - காவல்துறை அதிரடி அறிவிப்பு!திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் தங்க கூடாது - காவல்துறை அதிரடி அறிவிப்பு!

திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் தங்க கூடாது: தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக இருக்கும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் தினசரி பெரும்பாலான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக பௌர்ணமி, அமாவாசை உள்ளிட்ட நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் தங்க கூடாது – காவல்துறை அதிரடி அறிவிப்பு!

அதுமட்டுமின்றி பௌர்ணமி நாட்களில் திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரையில் பக்தர்கள் தங்கி முருகனை வழிபாடு செய்வது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கனமழை பெய்து வருகிறது.

அதன்படி, நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை தொடர்ச்சியாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் திருச்செந்தூர் மாவட்ட காவல்துறை தற்போது அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் இரவில் தங்கக்கூடாது என்று திருச்செந்தூர் காவல்துறை  அறிவித்துள்ளது.

மெட்டா நிறுவனத்திற்கு 7000 கோடி அபராதம் – எதற்காக தெரியுமா?

இன்று பௌர்ணமி என்பதால் கோவிலில் கூட்டம் அதிகமாக இருக்க கூடும். இதனால் சிலர் கடற்கரை பகுதியில் தங்க கூடும். தற்போது மழை பெய்து வருவதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி கடற்கரையில் தங்க வேண்டாம் என்று போலீஸ் தெரிவித்துள்ளது. 

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

APAAR ID CARD: அபார் மாணவர் அடையாள அட்டை

மாணவர்களுக்காக அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை

CISF-ல் முதல் மகளிர் சிறப்புப் படை 2024

9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *