தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக திருச்செந்தூருக்கு 2 நாட்கள் வர தடை விதித்து மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
திருச்செந்தூர்:
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பொழிந்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் கடந்த 2 நாட்களாக பெய்த அதிக கனமழை காரணத்தால் தாமிரபரணி ஆற்றில் 2-வது நாளாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓட தொடங்கியது. இதனை தொடர்ந்து தற்போது ஆற்றில் 56 ஆயிரம் கன அடி நீர் உயர்ந்து காணப்படுகிறது.
திருச்செந்தூருக்கு 2 நாட்கள் வர தடை – மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு!
இதன் காரணமாக தாமிரபரணி ஆறு, காட்டாறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. குறிப்பாக கடற்கரை பகுதிகளான தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டது. அதேபோல், நெல்லையில் இருந்து ஸ்ரீவைகுண்டம் வழியாக திருச்செந்தூர் செல்லும் சாலைகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
BJP எல்.கே.அத்வானி திடீர் உடல்நலக்குறைவு – மருத்துவமனையில் அனுமதி!
மேலும், திருச்செந்தூர் பாதைகளில் வெள்ள நீர் செல்வதால், மாற்று பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தொடர்ந்து கனமழை பெய்து வரும் காரணத்தால், திருச்செந்தூர் கோவிலுக்கு இன்று மற்றும் நாளை வருவதை 2 நாட்களுக்கு பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வேண்டுகோள் விடுத்துள்ளார். Thiruchendur devotees 2 days avoid coming latest news
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
Flipkart ஆன்லைன் ஆர்டர் – இனி கேன்சல் செய்தால் கட்டணம்? – வெளியான முக்கிய தகவல்!!
2029ல் ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்? .. டிசம்பர் 16 ஆம் தேதி லோக்சபாவில் தாக்கல்!
MLA ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார் – வெளியான ஷாக்கிங் தகவல்!
தமிழகத்தில் ஞயிற்றுக்கிழமை (15.12.2024) நாளை மின்தடை உண்டா? இதோ முழு விபரம்
பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை – சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் Students!
TVK கட்சி 2வது மாநில மாநாடு – எப்போது தெரியுமா? பக்காவா பிளான் போட்ட தலைவர் விஜய்!
TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு 2024! முடிவுகளை காண லிங்க் உள்ளே !