Home » ஆன்மீகம் » ஆன்மிகம் | இன்று | திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில் | அங்கு என்ன விசேஷம் தெரியுமா?

ஆன்மிகம் | இன்று | திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில் | அங்கு என்ன விசேஷம் தெரியுமா?

thirukadaiyur temple history ஆன்மிகம் இன்று

ஆன்மிகம்: தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

திருக்கடையூர் ரயில் நிலையம், இங்குள்ள ரயில் நிலையத்திலிருந்து கிழக்கே 1 கி.மீ தொலைவில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது. பிரம்மாண்டமான ஆலயம், இறைவன் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

இறைவன்: அமிர்தகடேசுவரர்

இறைவி: அபிராமி.

சிவபிரானின் அட்ட வீரட்ட தலங்களுள் இதுவும் ஒன்று. மார்க்கண்டேயனுக்காக இங்கு இறைவன் காலனை சம்ஹாரம் செய்து, மார்க்கண்டேயனுக்கு என்றும் பதினாறு வயதாக வாழ வரம் அளித்த திருத்தலம்.

உய்யவந்தார், அகத்தியர், காரி நாயனார், குங்கிலியக் கலய நாயனார் ஆகியோர் சிவனை பூஜித்த ஆலயம். அபிராம பட்டர் அவதரித்த திரு திருத்தலம். இறைவனை வழிபட்டு அந்தாதி முறையில் அமைந்த, நூறு பாடல்களை இயற்றினார்.

Anmegam: கும்பகோணம் திருநாகேஸ்வரம் கோவில் | ராகு பகவான் திருத்தலத்தின் வரலாறு!

அது அபிராமி அந்தாதி என்ற பெயரில் இன்றும் புகழுடன் விளங்குகிறது. அபிராமி பட்டர் இத்தலத்திலேயே முக்தி அடைந்தார்.

இவ்வாலயத்தில் கால சம்ஹார மூர்த்தி உரு பெரிய அளவில் விளங்குகிறது. மகாலிங்கத்தின் மீது வீசிய பாசக் கயிற்றின் தழும்பு இன்றும் காணப்படுகிறது.

காரி நாயனார் இறைவனை வழிபட்டு முக்தி அடைந்த திருத்திருத்தலம். அப்பர், சுந்தரர், சம்பந்தர் மூவராலும் பாடல் பெற்ற திரு திருத்தலம்.

பெரிய புராணத்தில் சேக்கிழாரும் இத்திருத்தல இறைவனை பாடியுள்ளார். அம்பிகை அபிராமியே இங்கு விசேஷம். அம்பாளின் சன்னதி நோக்கி அமைந்துள்ளது.

பூஜை நேரம் மற்றும் இதர தகவல் அறிய அதிகாரபூர்வ இணையதளம் – Click Here

வீட்டில் பணம் தங்க மாட்டிங்கிறதா? இந்த விஷயங்கள் தான் முக்கிய காரணம்!

திருமணம் தடைபட்டு போகுதா? .., அப்ப இந்த கோவிலுக்கு போங்க.., கல்யாணம் கன்ஃபார்ம்!!

எத்தனை முக ருத்ராட்சம் அணிந்தால் நல்லது?.., அதனால் என்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?

நவகிரகங்கள் – சூரியன் முதல் கேது வரை விளக்கம்

சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் வரலாற்று விவரங்கள்! அடடா இத்தனை நாளா இது தெரியாம போச்சே!!

சமயபுரம் மாரியம்மன் கோவில் வரலாறு தெரியுமா?.., அடடா இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

Share this

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top