Breaking News: கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு 50 % கட்டணம்: நாடு முழுவதும் இருக்கும் சுங்கச்சாவடிகளில் வருடந்தோறும் 10 சதவீத கட்டணத்தை உயர்த்திக் கொள்ள தனியார் சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர்களுக்கு உரிமை வழங்கப்பட்டு வருகிறது.
கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு 50 % கட்டணம்
அந்த வகையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கன்னியாகுமரி 4 வழி சாலையில் அமைந்துள்ளது கப்பலூர் சுங்கச்சாவடி. இந்நிலையில் கப்பலூர் சுங்கச்சாவடி குறித்த ஒரு ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது கப்பலூர் சுங்கச்சாவடி வழியாக செல்லும் உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க வரி கட்டணம் வாங்காமல் அனுமதி வழங்கி வந்த நிலையில், தற்போது அதை தளர்த்தி நாளை முதல் உள்ளூர் வாகனங்களுக்கு 50 சதவீதம் சுங்க வரி கட்டணம் செலுத்த வேண்டும்.
இதையும் படிங்க: திருச்சூரில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் தீவிரம் – இதுவரை 310 பன்றிகள் அழிப்பு!!
எனவே நாளை நள்ளிரவு முதல் உள்ளூர் வாகனங்கள் 50 சதவீதம் சுங்க வரி கட்டணம் செலுத்த வேண்டும் என்று சுங்கச்சாவடி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் உள்ளூர் மக்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். வழக்கம் போல் இருசக்கர வாகனங்களுக்கு மட்டும் கட்டணமில்லாமல் கடந்து செல்லலாம் என தெரிவித்துள்ளது.
இளநிலை நீட் கவுன்சிலிங் ஒத்திவைப்பு
அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்
திண்டுக்கல் மாநகராட்சி இளநிலை உதவியாளர் சஸ்பெண்ட்
மூன்று குற்றவியல் சட்டம் விவகாரம்