திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வசந்த உற்சவ விழா 2024. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வசந்த உற்சவ விழா வரும் மே மாதம் 13 ஆம் தேதி சுவாமிகளுக்கு காப்புக்கட்டுடன் தொடங்க உள்ளதாக திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வசந்த உற்சவ விழா 2024
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
மே 13, 2024 :
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வசந்த உற்சவ விழா வரும் மே மாதம் 13 ஆம் தேதி சுவாமிகளுக்கு காப்புக்கட்டுடன் துவங்குகிறது.
அன்று உற்சவர் சுப்பிரமணிய சுவாமி மற்றும் தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் முடிந்தவுடன் காப்பு கட்டப்படும்.
மே 21, 2024 :
இரவு 7 மணிக்கு வசந்த மண்டபத்தின் மையப்பகுதியில் தண்ணீர் நிரப்பப்பட்டு அமைக்கப்பட்டிருக்கும் மேடையில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருள்வர். மேலும் 30 நிமிடங்கள் இந்த வசந்த உற்சவ விழா நடைபெறும்.
மே 22, 2024 :
விசாக பால்குட திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு சண்முகர், வள்ளி, தெய்வானை ஆகியோருக்கு சிறப்பு பாலபிஷேகம் நடைபெற்று விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருள்வர்.
அப்போது திருப்பரங்குன்றம் மற்றும் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக தங்கள் தலையில் சுமந்து வரும் பால் குடங்களை கொண்டு சுவாமிக்கு மதியம் 2 மணி வரை அபிஷேகம் செய்யப்படும்.
மே 23, 2024 :
காலையில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை தங்க குதிரை வாகனத்தில் தியாகராஜர் கல்லூரி வளாகத்தில் உள்ள மொட்டையரசில் எழுந்தருள்வர்.
அங்கு மொட்டையரசு திருவிழா முடிந்து இரவில் பூப்பல்லக்கில் கோவிலுக்கு திரும்புவர்.
சதுரகிரி செல்ல மே 5 முதல் 8 ஆம் தேதி வரை அனுமதி ! பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடத்த ஏற்பாடு – முழு தகவல் இதோ !
இவ்வாறு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வசந்த உற்சவ விழாவின் நிகழ்ச்சி நிரல் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது