ஆவின் பால்பண்ணையில் தலை துண்டாகி பெண் உயிரிழப்பு: திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் ஆவின் பால் பண்ணை ஒன்று இயங்கி வருகிறது. அந்த பால் பண்ணையில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வேலைபார்த்து வரும் நிலையில், ஒரு நாளைக்கு 90 ஆயிரம் லிட்டர் அளவுக்கு பால் தயாரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. தினமும் பரபரப்பாக இருந்து வரும் இந்த ஆவின் பால் பண்ணையில் நேற்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 20) ஒரு அதிர்ச்சி தரும் சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஆவின் பால்பண்ணையில் தலை துண்டாகி பெண் உயிரிழப்பு
அதாவது, ” ஆவின் பால் பண்ணையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த உமா ராணி(30) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் உற்பத்தியாகி வெளியே வரும் பாலை டப்பில் அடுக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இப்படி இருக்கையில் உமாராணியின் தலைமுடி மற்றும் துப்பட்டா இயந்திரத்தின் அருகில் இருந்த மோட்டாரின் கன்வேயர் பெல்ட்டில் எதிர்பாராத விதமாக சிக்கி உள்ளது. thiruvallur aavin factory
Also Read: தமிழக மக்களே முக்கிய அறிவிப்பு – இனி ஆன்லைனில் மட்டுமே மின் கட்டணம் செலுத்த வேண்டும்!
இந்த விபத்தில் அவருடைய தலை துண்டாகி போன நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து போலீசுக்கு தகவல் கொடுத்த கொஞ்ச நேரத்தில் சம்பவ இடத்திற்கு காவல்துறை வந்து அந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு
கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கு
சுற்றுலா பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்