தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு குட் நியூஸ்… இந்த நாளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை: பொதுவாக தமிழகத்தில் இருக்கும் பல்வேறு முக்கிய கோவில் திருவிழாக்களில் மக்கள் அனைவரும் கலந்து கொள்வதற்காக திருவிழா நடக்கும் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு வருகிற ஜூலை 29ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்கும் திருத்தணி முருகன் கோவில் ஒவ்வொரு வருடமும் ஆடி கிருத்திகை கொண்டாடப்பட்டு வருகிறது.
இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற watsaap பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது பக்தர்கள் முருகனுக்கு காவடி, பால்குடம் எடுத்து தரிசனம் செய்வார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு வருகிற ஜூலை 29ம் தேதி ஆடி கிருத்திகை கொண்டாடப்பட இருக்கிறது. எனவே மக்கள் அனைவரும் கலந்து கொள்ள இருக்கும் நிலையில் அம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பள்ளி மற்றும் கல்லூரி, அரசு ஊழியர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடுகட்டும் விதமாக வருகிற ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி(சனிக்கிழமை) அன்று வேலை நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது சிபிஐ – காலால் கொள்கை முறைகேடு விவகாரத்தில் நடந்த நடவடிக்கை!
நாமக்கல்லில் 11 வயது மாணவி மயங்கி உயிரிழப்பு
தவெக தலைவர் விஜய் ஊக்கத்தொகை வழங்கும் விழா
ரெப்கோ வங்கி நிர்வாக இயக்குனர் ஆட்சேர்ப்பு 2024 !
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
local holiday news – tamilanadu latest news – tn local leave latest update – tamilnadu students – school holidays – college holidays news