Home » செய்திகள் » மதுப்பிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ் –  டிச 12 முதல் 14 வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை – எதற்காக தெரியுமா?

மதுப்பிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ் –  டிச 12 முதல் 14 வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை – எதற்காக தெரியுமா?

மதுப்பிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ் -  டிச 12 முதல் 14 வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை - எதற்காக தெரியுமா?

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு வருகிற டிச 12 முதல் 14 வரை விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

டாஸ்மாக் கடை:

தமிழகத்தில் கிட்டத்தட்ட 4 ஆயிரத்திற்கும் மேலான டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. எனவே இந்த கடைகளின் வாயிலாக தினசரி 120 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டி வருகிறது. மேலும் இந்த நிதி மூலம் பல்வேறு மக்கள் நல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. ஒரு பக்கம்  டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று தொடர்ந்து பெண்கள் போராட்டம் செய்து வருகின்றனர்.

இருந்தாலும் கூட ஒவ்வொரு நாளும், மது விற்பனை மிகப்பெரும் உச்சத்தை தொட்டு வருகிறது. மேலும், தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட  விசேஷ நாட்களில் கூட டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அரசு சம்பந்தமான நாட்களிலோ, உள்ளூர் விடுமுறை நாட்களிலோ, குருபூஜை நாட்கள், கோவில், மசூதி, தேவாலயம் விழாக்கள் நாட்களில் மட்டுமே விடுமுறை விடப்படுகிறது.

அந்த வகையில் வருகிற 12 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், உலகப் புகழ்பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா சில நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று மகாதேரோட்டம் நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து,  13ம் தேதி கோவில் பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயர மலையின் மாலை நேரத்தில் மீது மகா தீபம் ஏற்றப்பட இருக்கிறது.

இதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். எனவே இதன் காரணமாக அங்கு ஏதும் அசம்பாவிதங்கள் ஏற்பட கூடாது என்பதற்காக, டிசம்பர் 12ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை மணலூர் பேட்டை சாலை, வசந்தம் நகர் மற்றும் திருமஞ்சன கோபுர வீதி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் டாஸ்மாக் கடைகள் இயங்காது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த உத்தரவை மீறி டாஸ்மாக் கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

தமிழ்நாட்டில் நாளை (11.12.2024) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் – மின்சார வாரியத்தின் அறிவிப்பு !

ஒரே போட்டியில் 3 சாதனை படைத்த எலிஸ் பெர்ரி – இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய சிங்கப் பெண் அசத்தல்!!

டிச 12ல் 23 மாவட்டங்களில் கனமழை பொளக்க போகுது –  சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

குரூப் 4 சான்றிதழ் பதிவேற்றம் லாஸ்ட் டேட் – டிசம்பர் 21 தான் கடைசி – காலக்கெடு கொடுத்த TNPSC!!

ஆதவ் அர்ஜூனன் 6 மாதம் சஸ்பெண்ட் – விசிக தலைவர் திருமாவளவன் அதிரடி முடிவு!

2027ல் செயல்பாட்டுக்கு வரும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை – வெளியான முக்கிய தகவல்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top