ஆகஸ்ட் 2ல் ரேஸ் விடும் 4 தமிழ் திரைப்படங்கள் - ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் பாலசரவணன் ஜெயிப்பாரா?ஆகஸ்ட் 2ல் ரேஸ் விடும் 4 தமிழ் திரைப்படங்கள் - ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் பாலசரவணன் ஜெயிப்பாரா?

Kollywood Movies: ஆகஸ்ட் 2ல் ரேஸ் விடும் 4 தமிழ் திரைப்படங்கள்: தமிழ் சினிமாவில் மக்களை எப்படியாவது கவர வேண்டும் என்று புதுப்புது கதைகளுடன் பல இயக்குனர்கள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். அதிலும் சிலர் அறிமுக இயக்குனர்களாக இருந்த போதிலும் படத்தின் மூலம் தங்களின் பெயரை ரசிகர்கள் மனதில் நிலை நிறுத்துகின்றனர். இன்னும் சொல்ல போனால் ஒரு புறம் சில படங்கள் 100 கோடிக்கு மேல் வசூலை வாரி குவிக்கிறது.

ஆகஸ்ட் 2ல் ரேஸ் விடும் 4 தமிழ் திரைப்படங்கள்

இன்னொரு புறம் நல்ல கதை என்று ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறுகிறது. மேலும் ஒரு வருடத்தில் 200க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின்றன. ஆனால் ஒரு சில படங்கள் மட்டுமே ரசிகர்களின் பேவரைட் புக்கில் இடம் பிடிக்கின்றனர். இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் 3ல் அதிகமான படங்கள் வெளியாக இருக்கிறது. அவைகள் பின்வருமாறு,

மழை பிடிக்காத மனிதன்:

இசையில் பல்வேறு சாதனைகள் படைத்து தற்போது நடிப்பில் பேரும் புகழும் எடுத்து வருபவர் தான் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி வெளியாக இருக்கிறது. விஜய் மில்டன் இயக்கிய இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் சேர்ந்து சத்யராஜ், சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற நிலையில், படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

போட்:

நகைச்சுவை நடிகர் யோகி பாபுவின் மாறுபட்ட நடிப்பில் உருவான திரைப்படம் தான் BOAT. இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் உருவான இப்படத்தில்  சின்னி ஜெயந்த், எம் எஸ் பாஸ்கர் என பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தை தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் மற்றும் கலைவாணி இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் அமளிக்க வரவேற்பை பெற்ற நிலையில், இப்படம் வருகிற ஆகஸ்ட் 2ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

பேச்சி:

நகைச்சுவை நடிகர் பாலசரவணன் ஹீரோவாக நடித்த திரைப்படம் தான் பேச்சி. இந்த படத்தை ராமச்சந்திரன் என்பவர் எழுதி இயக்கியுள்ளார்.

ராஜேஷ் முருகேசன் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை வெயிலோன் நிறுவனமும் வீரஸ் புரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.

ஹாரர் படமாக உருவாகியுள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் 2ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

Also Read: ரச்சிதா போன பிறகு பிக்பாஸ் தினேஷ்க்கு அடித்த அதிர்ஷ்டம் – என்னனு தெரியுமா? போட்டோ வைரல்!!

ஜமா:

பாரி இளவழகன் இயக்கி நடித்த திரைப்படம் தான் ஜமா.

இப்படத்தில் அவருடன் இணைந்து, சேத்தன், அம்மு அபிராமி, ஸ்ரீ கிருஷ்ண தயாள், கே.வி.என் மணிமேகலை,  சிவா மாறன்  உள்ளிட்ட நம்பிக்கைக்குரிய பல நடிகர்கள் நடித்து உள்ளனர்.

மேலும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா தனது இசையின் மூலம் உயிர் கொடுத்துள்ளார் என்று சமீபத்தில் நடந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் பேசியுள்ளார். இப்படமும் ஆகஸ்ட் 2ம் தேதி தான் வெளியாக இருக்கிறது.

எனவே இப்படி ஒரே நாளில் நான்கு படங்கள் ரேஸ் விட போகிறது. இந்த ரேஸில் எந்த படம் வெற்றி பெற போகிறது என்பது பொறுத்து இருந்து பார்க்கலாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *