தற்போது தூத்துக்குடி தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதில் தொழிற்சாலை பணியில் ஈடுபட்டிருந்த 30 பேர் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா வாயு கசிவு
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
தூத்துக்குடி :
தூத்துக்குடி மாவட்டம் புதூர் பாண்டியபுரத்தில் நிலா சீ புட்ஸ் தனியார் மீன் மற்றும் கடல் உணவுகளை பதப்படுத்தும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் அங்குள்ள கடற்கரையில் இருந்து மீன்கள் கொள்முதல் செய்து இந்த ஆலையில் பதப்படுத்தப்பட்டு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அம்மோனியா வாயு கசிவு :
இதனை தொடர்ந்து வழக்கம் போல் அங்கு பணிபுரியும் பெண் ஊழியர்கள் இரவு 11 மணியளவில் மீன் பதப்படுத்தும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அமோனியா சிலிண்டரில் வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆலையில் பணியாற்றிக்கொண்டிருந்த பெண்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு 30 பேர் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வாகனத்தில் ‘பாஸ்டேக்’ ஒட்டலனா இரு மடங்கு கட்டணம் – தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு!!
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.