தமிழக மாணவர்களுக்கு குட் நியூஸ் - ஆகஸ்ட் 5ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை - வெளியான முக்கிய அறிவிப்பு!!தமிழக மாணவர்களுக்கு குட் நியூஸ் - ஆகஸ்ட் 5ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை - வெளியான முக்கிய அறிவிப்பு!!

School Holiday: தமிழக மாணவர்களுக்கு குட் நியூஸ்: பொதுவாக மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களின் திருவிழா போது மக்கள் அனைவரும் கலந்து கொள்ள அம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகிற ஆகஸ்ட் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார். school and college leave

அதில் கூறியிருப்பதாவது, ”  தூத்துக்குடி மாவட்டத்தில் உலகப் பிரசித்தி பெற்ற பனிமய மாதா பேராலய திருவிழா ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 11 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இந்த திருவிழாவில் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். Thoothukudi

அவ்வகையில் இந்த ஆண்டு 442 வது ஆண்டு பனிமய மாதா பேராலய திருவிழா கடந்த 26ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.  இந்நிலையில் இந்த திருவிழாவின் 10 ம் நாளான வரும் திங்கட்கிழமை ஆகஸ்ட் 5ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் திங்கள் கிழமை தூத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. local holiday

Also Read: இரண்டு லட்சம் இந்தியர்கள் வெளிநாடுகளில் குடியேற்றம் – இந்திய குடியுரிமையை துறந்துவிட என்ன காரணம்?

இருப்பினும் அன்று அரசு கருவூலங்கள், முக்கிய அலுவலகங்கள் ஆகியவை குறைந்த ஊழியர்களுடன் இயங்கும். குறிப்பாக இந்த விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் விதமாக  ஆகஸ்ட் 10ம் தேதி சனிக்கிழமை கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *