தமிழக மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்…, இந்த தேதியில் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!தமிழக மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்…, இந்த தேதியில் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தமிழக மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்: தமிழகத்தில் விடுமுறை முடிந்து சமீபத்தில் தான் அனைத்து பள்ளிகளும் தொடங்கி மாணவர்கள் வழக்கம் போல் சென்று வருகின்றனர். இப்படி இருக்கையில் மாணவர்களுக்கு அதிர்ஷ்டம் அடித்தது போல ஒரு சூப்பரான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகிற ஆகஸ்ட் 5ம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது, ” தூத்துக்குடி பனிமய மாதா பேராலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாக விளங்கி வருகிறது. இந்த ஆலயத்தில் வருடத்திற்கு 12 நாட்கள் திருவிழா நடைபெறும்.

அந்த வகையில் இந்த திருவிழா வருகிற ஜூலை 26-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. தூத்துக்குடியில் 442 வது ஆண்டு பனிமய மாதா பேராலய திருவிழா என்பதால் மக்கள் அனைவரும் கோலாகலமாக கொண்டாட இருக்கிறார்கள்.

அதுமட்டுமின்றி இந்த ஆலயத்திற்குள் சாதி, மத பாகுபாடு இன்றி அனைவரும் சமமே என்ற வாசகத்தின் அடிப்படையில் எல்லா மக்களும் கொண்டாடி வருகின்றனர். தற்போது திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. summer holidays 2023

மேலும் வரும் ஆகஸ்ட் 6ம் தேதி அன்னையின் திருவுருவ பவனி நடைபெற இருப்பதால் அன்று மக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற உள்ளது.

Also Read: சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் எப்போது? – எங்கே நடக்கிறது தெரியுமா? தமிழ்நாடு அறிவிப்பு!!

இதனால்  அதற்கு முதல் நாள் ஆகஸ்ட் 5ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் 10ம் தேதி சனிக்கிழமை அன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வேலை நாளாக கடைபிடிக்க வேண்டும் என்று  மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அறிவித்துள்ளார்.  holiday

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *