தூத்துக்குடியில் அமையவுள்ள வின்பாஸ்ட் நிறுவன தொழிற்சாலை - சுற்றுசூழல் அனுமதி கேட்டு விண்ணப்பம் !தூத்துக்குடியில் அமையவுள்ள வின்பாஸ்ட் நிறுவன தொழிற்சாலை - சுற்றுசூழல் அனுமதி கேட்டு விண்ணப்பம் !

தூத்துக்குடியில் அமையவுள்ள வின்பாஸ்ட் நிறுவன தொழிற்சாலை. தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் 4000 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் தொழிற்சாலை ஒன்றை அமைக்க உள்ளது. அந்த வகையில் வின்பாஸ்ட் அமைக்கவுள்ள சிப்காட் தொழில் பூங்காவிற்கு நேரடியாக வந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடியில் வின்பாஸ்ட் நிறுவனம் ரூ.1119.67 கோடி செலவில் 114 ஏக்கர் பரப்பளவில் மின்சார வாகன தொழிற்சாலை ஒன்றை அமைக்க உள்ளது. இந்த தொழிற்சாலை அமைவதன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் பொருளாதார முன்னேற்றம், வேலை வாய்ப்பு போன்றவை உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் தூத்துக்குடியில் அமையவுள்ள இந்த மின்சார வாகன உற்பத்தி ஆலை ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்களை உற்பத்தி செய்ய உள்ளது. இதன் காரணமாக இந்த பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்புடன் சுமார் 3500 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் வழங்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

கிணற்றில் சிக்கிய குட்டியானை 10 மணி நேரத்திற்கு பின் மீட்பு – தாய் யானையுடன் சேர்த்து வைக்க வனத்துறையினர் முயற்சி!!

இந்நிலையில் தூத்துக்குடியில் வின்பாஸ்ட் நிறுவனம் தொழிற்சாலைக்கான கட்டுமானப்பணிகளை மேற்கொள்வதற்கு சுற்றுசூழல் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *