தமிழகத்தில் தோழி விடுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம் - அரசு வெளியிட்ட முக்கிய அறிக்கை!!தமிழகத்தில் தோழி விடுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம் - அரசு வெளியிட்ட முக்கிய அறிக்கை!!

தமிழகத்தில் தோழி விடுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்: பொதுவாக படித்துவிட்டு வேலை தேடி மற்ற ஊர்களுக்கு செல்லும் பெண்களுக்கு மிகப்பெரிய பிரச்சினை தங்கும் இடம் தான்.

அப்படி வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கினாலும் கூட வாடகையை கேட்டாலே தலை சுற்றி போகிவிடும். சரி  2 அல்லது  3 பெண்களுடன் சேர்ந்து தங்கிக் கொள்ளலாம் என்றாலும் கூட தங்கும் வாடகை, உணவுக்கான செலவு, கரண்ட் பில், போக்குவரத்து செலவு என மாத சம்பளத்தில் 90 சதவீதம் சென்றுவிடும்.

அப்படி பெண்கள் கஷ்டங்களை குறைப்பதற்காக தமிழ்நாடு அரசின் தோழி பெண்கள் தங்கும் விதமாக சென்னை, செங்கல்பட்டு, பெரம்பலூர், சேலம், திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் 11 மகளிர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன.

Also Read: 25 பைசா தான் வேணும் – வங்கியில்  அடம்பிடித்த நபர் – குண்டுகட்டாக தூக்கிய போலீஸ்!

இந்நிலையில் மதுரை, திருப்பூர், தூத்துக்குடி, புதுக்கோட்டை, கோவை மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள பழைய விடுதிகளை சீரமைக்க உள்ளதாக TNWWHC தெரிவித்துள்ளது. மேலும் பல வசதிகளுடன் கூடிய விடுதியை உருவாக்கப்பட இருப்பதாகவும், அதற்காக ஒரு கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *