மத்திய பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் எட்டு கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிகளுக்கு விடுமுறை
உலகில் உள்ள பல நாடுகளில் கொரோனாவின் பிடியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நிலையில், சில நோய்கள் தீவிரமாக மக்களிடையே பரவி வருகின்றன. அந்த வகையில் தட்டம்மை என்ற நோய் தற்போது மத்திய பிரதேசம் மாநிலத்தின் முக்கிய பகுதியான போபாலில் மிக தீவிரமாக பரவி வருகிறது. அங்கு இப்பொழுது வரை 17 குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதில் இரண்டு குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஒரு உத்தரவை பிறப்பித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, ” கிட்டத்தட்ட எட்டு கிராமங்கள் தட்டம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பள்ளி குழந்தைகளுக்கு நோய் ஏற்பட கூடாது என்பதை கருத்தில் கொண்டு அந்த 8 கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.