திருச்சூரில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் தீவிரம் - இதுவரை 310 பன்றிகள் அழிப்பு!!திருச்சூரில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் தீவிரம் - இதுவரை 310 பன்றிகள் அழிப்பு!!

Breaking News: திருச்சூரில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் தீவிரம்: கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு காய்ச்சல்கள் மற்றும் தொற்று நோய்கள் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் மக்கள் பீதியில் இருந்து வருகின்றனர். குறிப்பாக தென்மேற்கு பருவமழை சீசன் ஆரம்பிக்கும் முன்னரே இந்த நோய்கள் மக்களுக்கு பரவ தொடங்கிய நிலையில் தற்போது பருவமழை தீவிரம் அடைந்திருப்பதால் நோய் பரவல் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

சொல்லப்போனால்  தினசரி ஆயிரக்கணக்கானோர் பல்வேறு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் பறவை காய்ச்சலும் அதீத பரவலை வெளிக்காட்டி வருகிறது.  

இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள  வாத்துகள், கோழிகள் மற்றும் பறவைகள் கொல்லப்பட்டன. இந்நிலையில் திருச்சூர் பகுதியில் பன்றிகளுக்கு ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதாவது திருச்சூர் மடக்கத்தனம் பகுதியில் தான் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் அதிகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. இதனால் தொற்று பாதிப்பு உள்ள பகுதியில் இருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் வளர்க்கப்பட்டு வரும் பன்றிகளை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக  மீட்பு குழுவினர் உருவாக்கப்பட்ட நிலையில் அவர்கள் பன்றிகளை அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  

இதையும் படிங்க: இந்தோனேசியாவில் தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு – 12 பேர் பலி – 18 பேர் மாயம்!!

பன்றிகளை அழிக்கும் பணி கடந்த ஜூலை 5ம் தேதி தொடங்கிய நிலையில் மடக்கத்தனம் பகுதியில் இதுவரை 310 பன்றிகள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பாதிப்பு வேறு எங்கும் இருக்கிறதா? என்று கால்நடைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *