சனிபகவான் கும்பத்தில் இருந்து மீன ராசிக்கு இடம் பெறுகிறார். இதனால், துலாம் ராசிக்கு 6-ம் இடத்தில் சனி அமர்ந்து பலன் தரப்போகிறார். இந்த ஆண்டு சனி பெயர்ச்சியால் ஜாக்பாட் அடிக்கும் ராசிகளில் துலாம் ராசியே முதலிடத்தில் இருக்கிறது. மேலும் துலாம் ராசிக்காரர்களுக்கான பலன்கள் என்னென்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
துலாம் ராசிக்காரர்களுக்கான பலன்கள்:
பிள்ளைப் பாக்கியம் கிடைக்காத தம்பதியினருக்கு பிள்ளை வரம் கிடைக்கும். கடனைக் கொஞ்சம் கொஞ்சமாக பைசல் செய்வீர்கள்.
புதிய வீடு கட்டவும், வாங்கவும் மற்றும் புதிய தொழில் தொடங்கவும் வங்கிக் கடன் கிடைக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திடாதீர்கள்.
அந்தரங்க விஷயங்களை அடிமனதில் தேக்குவது நல்லது. அதிக கடன்கள் வாங்காமல் இருப்பது நல்லது. பணவரவு அதிகமாக இருக்கும்.
இருந்தாலும், மே மாதம் வரை எந்த விஷயத்திலும் மூக்கை விடாமல் இருந்தால் நல்லது. செப்டம்பருக்கு பிறகு நல்ல காலம் கைகூடி வரும்.
இந்த ராசியைச் சேர்ந்த மாணவ மாணவியருக்கு நல்ல காலம் அமையும். வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு உண்டாகும்.
பரிகாரங்கள்:
ஆஞ்சநேயர் வழிபாடு, மகாவிஷ்ணு வழிபாடு நன்மையை கொடுக்கும்.