"கில்லி" வெற்றியை தொடர்ந்து அடுத்து ரீ ரிலீஸாகும் தளபதியின் மாஸ்டர் பீஸ் திரைப்படம்.., ரசிகர்கள் கொண்டாட்டம்!"கில்லி" வெற்றியை தொடர்ந்து அடுத்து ரீ ரிலீஸாகும் தளபதியின் மாஸ்டர் பீஸ் திரைப்படம்.., ரசிகர்கள் கொண்டாட்டம்!

“கில்லி” வெற்றியை தொடர்ந்து அடுத்து ரீ ரிலீஸாகும் தளபதியின் மாஸ்டர் பீஸ் திரைப்படம்: தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக கோலிவுட் கோட்டையில் கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான்  தளபதி விஜய். இப்பொழுது இவர் வெங்கட் பிரபு படைப்பில் உருவாகி வரும் GOAT என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படம் வருகிற விநாயகர் சதுர்த்தி (செப் 9) அன்று வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் உருவாக இருக்கும் தளபதி 69 படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்துடன் அவர் அரசியலில் முழு மூச்சாக இறங்க இருக்கிறார் . இது அவருடைய ரசிகர்களுக்கு வருத்தம் அளித்தாலும் கூட தலைவராக ஏற்க மனதை மாற்றி கொண்டனர். மேலும் புது படம் வெளியாகவில்லை என்றால் என்ன தளபதி நடித்த பழைய படங்களை ரீ ரிலீஸ் செய்தாலும் நாங்க பார்ப்போம் என்று விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில்  50 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

விஜய பிரபாகரனை திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டாரா? ஆதாரத்துடன் பேசிய பிரேமலதா விஜயகாந்த்!

இந்நிலையில் விஜய்யின் சினிமா கேரியரை மாற்றிய திரைப்படம் ஒன்று ரீ ரிலீஸ் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற ஜூன் 21ம் தேதி ஏ . ஆர். முருகதாஸ்  இயக்கத்தில் விஜய் நடித்து 100 கோடி வசூலித்த “துப்பாக்கி” படத்தை ரீ ரிலீஸ் செய்ய இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதை கேட்ட ரசிகர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர். மேலும் இந்த படமும் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சனை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

“கில்லி” தளபதியின் மாஸ்டர் பீஸ் துப்பாக்கி திரைப்படம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *