நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு அருகில் உள்ள உதகை தலைகுந்தா பைன் ஃபாரஸ்ட் சுற்றுலா மையத்தில் புகுந்த புலி யால் அப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
உதகை தலைகுந்தா பைன் ஃபாரஸ்ட் சுற்றுலா மையத்தில் புகுந்த புலி
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
சுற்றுலா பகுதிக்குள் புகுந்த புலி :
ஊட்டிக்கு அருகே தலைகுந்தா பைன் ஃபாரஸ்ட் சூழல் சுற்றுலா மையம் அமைந்துள்ளது. தற்போது இந்த சுற்றுலா மையத்தில் புலி ஒன்று புகுந்த சம்பவத்தால் பரபரப்பு நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பைன் ஃபாரஸ்ட் சூழல் சுற்றுலா மையம் அடுத்த இரண்டு நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வனத்துறை நடவடிக்கை :
அந்த வகையில் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் புலியின் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் வனத்துறையினர் புலி நடமாட்டத்தைக் கண்டறியும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் – சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு !
தற்போது உதகையின் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் செல்லக்கூடிய முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான பைன் பாரஸ்ட் சுற்றுலா மையத்தில் புலி நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.